வாசகங்கள்
14 பிப்ரவரி, 2026
Memorial of Saints Cyril, Monk, and Methodius, Bishop
அன்றைய திருப்பலி
Reading I
1 அரசர்கள் 12:26-32; 13:33-34
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 106:6-7, 19-20, 21-22
6⁽எங்கள் மூதாதையரின் வழிநடந்து,␢ நாங்களும் பாவம் செய்தோம்;␢ குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.⁾
7⁽எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த␢ வியத்தகு செயல்களைப் பற்றிச்␢ சிந்திக்கவில்லை;␢ உமது மாபெரும் பேரன்பை␢ அவர்கள் நினைவில் கொள்ளவில்லை;␢ மாறாக உன்னதமானவரை எதிர்த்துச்␢ செங்கடல் ஓரத்தில்* கலகம் செய்தனர்.⁾
19⁽அவர்கள் ஓரேபில் ஒரு␢ கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்;␢ வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;⁾
20⁽தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக,␢ புல்தின்னும் காளையின்␢ உருவத்தைச் செய்து கொண்டனர்;⁾
21⁽தங்களை விடுவித்த␢ இறைவனை மறந்தனர்;␢ எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;⁾
22⁽காம் நாட்டில் அவர் செய்த␢ வியத்தகு செயல்களை மறந்தனர்;␢ செங்கடலில் அவர் செய்த␢ அச்சுறுத்தும் செயல்களையும்␢ மறந்தனர்.⁾
Alleluia
மத்தேயு 4:4
4அவர் மறுமொழியாக, “⦃‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’⦄ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.
Gospel
மாற்கு 8:1-10
1அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம்,
2“நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை.
3நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என்று கூறினார்.
4அதற்கு அவருடைய சீடர்கள், “இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?” என்று கேட்டார்கள்.
5அப்போது அவர் அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள் “ஏழு” என்றார்கள்.
6தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.
7சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார்.
8அவர்கள் வயிறார உண்டார்கள். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.
9அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்;
10உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.