வாசகங்கள்
26 பிப்ரவரி, 2026
Thursday of the First Week in Lent
அன்றைய திருப்பலி
Reading I
எஸ்தர் C:12, 14-16, 23-25
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 138:1-2, 2-3, 7-8
1⁽ஆண்டவரே!␢ என் முழுமனத்துடன்␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ தெய்வங்கள் முன்னிலையில்␢ உம்மைப் புகழ்வேன்.⁾
2⁽உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி␢ உம்மைத் தாள் பணிவேன்;␢ உம் பேரன்பையும்␢ உண்மையையும் முன்னிட்டு␢ உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;␢ ஏனெனில், அனைத்திற்கும் மேலாக␢ உம் பெயரையும் உம் வாக்கையும்␢ மேன்மையுறச் செய்துள்ளீர்.⁾
3⁽நான் மன்றாடிய நாளில்␢ எனக்குச் செவிசாய்த்தீர்;␢ என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.⁾
7⁽நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்,␢ என் உயிரைக் காக்கின்றீர்;␢ என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக␢ உமது கையை நீட்டுகின்றீர்;␢ உமது வலக்கையால்␢ என்னைக் காப்பாற்றுகின்றீர்.⁾
8⁽நீர் வாக்களித்த அனைத்தையும்␢ எனக்கெனச் செய்து முடிப்பீர்;␢ ஆண்டவரே! என்றும் உள்ளது␢ உமது பேரன்பு;␢ உம் கைவினைப் பொருளைக்␢ கைவிடாதேயும்.⁾
Verse Before the Gospel
திருப்பாடல்கள் 51:12, 14
12⁽உம் மீட்பின் மகிழ்ச்சியை␢ மீண்டும் எனக்கு அளித்தருளும்;␢ தன்னார்வ மனம் தந்து␢ என்னைத் தாங்கியருளும்.⁾
14⁽கடவுளே! எனது மீட்பின் கடவுளே!␢ இரத்தப் பழியினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ அப்பொழுது, என் நா␢ உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.⁾
Gospel
மத்தேயு 7:7-12
7கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
8ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
9உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா?
10அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?
11தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!
12ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.