வாசகங்கள்
20 பிப்ரவரி, 2026
Friday after Ash Wednesday
அன்றைய திருப்பலி
Reading I
எசாயா 58:1-9
1⁽பேரொலி எழுப்பிக் கூப்பிடு,␢ நிறுத்திவிடாதே;␢ எக்காளம் முழங்குவது போல்␢ உன் குரலை உயர்த்து;␢ என் மக்களுக்கு␢ அவர்களின் வன்செயல்களையும்,␢ யாக்கோபின் குடும்பத்தாருக்கு␢ அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.⁾
2⁽அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும்␢ மக்களினம்போலும்,␢ தங்கள் கடவுளின் கட்டளையைக்␢ கடைப்பிடிப்போர் போலும்␢ நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்;␢ என் நெறிமுறைகள் பற்றிய␢ அறிவை நாடுகின்றார்கள்;␢ நேர்மையான நீதித்தீர்ப்புகளை␢ என்னிடம் வேண்டுகின்றார்கள்;␢ கடவுளை அணுகிவர விழைகின்றார்கள்.⁾
3⁽‘நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது,␢ நீர் எங்களை நோக்காதது ஏன்?␢ நாங்கள் எங்களைத்␢ தாழ்த்திக் கொண்டபோது␢ நீர் எங்களைக் கவனியாதது ஏன்?␢ என்கிறார்கள்.␢ நீங்கள் நோன்பிருக்கும் நாளில்␢ உங்கள் ஆதாயத்தையே␢ நாடுகின்றீர்கள்;␢ உங்கள் வேலையாள்கள் அனைவரையும்␢ ஒடுக்குகின்றீர்கள்.⁾
4⁽இதோ, வழக்காடவும்,␢ வீண்சண்டையிடவும்,␢ கொடும் கையால் தாக்கவுமே␢ நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்!␢ இன்றுபோல் நீங்கள்␢ உண்ணா நோன்பிருந்தால்␢ உங்கள் குரல் உன்னதத்தில்␢ கேட்கப்படாது.⁾
5⁽ஒருவன் தன்னை␢ ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான்␢ உண்ணாநோன்பின் நாளாகத்␢ தெரிந்து கொள்வது?␢ ஒருவன் நாணலைப் போல்␢ தன் தலையைத் தாழ்த்திச்␢ சாக்கு உடையையும் சாம்பலையையும்␢ அணிந்து கொள்வதா␢ எனக்கு ஏற்ற நோன்பு?␢ இதையா நீங்கள் நோன்பு என்றும்␢ ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும்␢ அழைக்கின்றீர்கள்?⁾
6⁽கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும்,␢ நுகத்தின் பிணையல்களை அறுப்பதும்␢ ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து␢ அனுப்புவதும், எவ்வகை␢ நுகத்தையும் உடைப்பதும் அன்றோ␢ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!⁾
7⁽பசித்தோர்க்கு உங்கள் உணவைப்␢ பகிர்ந்து கொடுப்பதும்␢ தங்க இடமில்லா வறியோரை␢ உங்கள் இல்லத்திற்கு␢ அழைத்து வருவதும்,␢ உடையற்றோரைக் காணும்போது␢ அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்␢ உங்கள் இனத்தாருக்கு உங்களை␢ மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ␢ நான் விரும்பும் நோன்பு!⁾
8⁽அப்பொழுது உன் ஒளி␢ விடியல் போல் எழும்;␢ விரைவில் உனக்கு␢ நலமான வாழ்வு துளிர்க்கும்;␢ உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;␢ ஆண்டவரின் மாட்சி␢ உனக்குப் பின்சென்று காக்கும்.⁾
9⁽அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்;␢ அவர் உனக்குப் பதிலளிப்பார்;␢ நீ கூக்குரல் இடுவாய்;␢ அவர் ‘இதோ! நான்’ என␢ மறுமொழி தருவார்.␢ உன்னிடையே இருக்கும்␢ நுகத்தை அகற்றிவிட்டு,␢ சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும்␢ பொல்லாதன பேசுவதையும்␢ நிறுத்திவிட்டு,⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 51:3-4, 5-6, 18-19
3⁽ஏனெனில், என் குற்றங்களை␢ நான் உணர்கின்றேன்;␢ என் பாவம் எப்போதும்␢ என் மனக்கண்முன் நிற்கின்றது.⁾
4⁽உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;␢ உம் பார்வையில் தீயது செய்தேன்;␢ எனவே, உம் தீர்ப்பினால்␢ உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;␢ உம் தண்டனைத் தீர்ப்பில்␢ நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.⁾
5⁽இதோ! தீவினையோடு␢ என் வாழ்வைத் தொடங்கினேன்;␢ பாவத்தோடே என் அன்னை␢ என்னைக் கருத்தாங்கினாள்.⁾
6⁽இதோ! நீர் விரும்புவது␢ உள்ளத்து உண்மையையே;␢ மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.⁾
18⁽சீயோனுக்கு இன்முகம் காட்டி␢ நன்மை செய்யும்;␢ எருசலேமின் மதில்களை␢ மீண்டும் கட்டுவீராக!⁾
19⁽அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்␢ முறையான பலிகளை விரும்புவீர்;␢ மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்␢ பலியாகச் செலுத்தப்படும்.⁾
Verse Before the Gospel
ஆமோஸ் 5:14
14⁽நன்மையை நாடுங்கள்,␢ தீமையைத் தேடாதீர்கள்;␢ அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல␢ படைகளின் கடவுளாகிய ஆண்டவர்␢ உங்களோடு இருப்பார்.⁾
Gospel
மத்தேயு 9:14-15
14பின்பு, யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.
15அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.