வாசகங்கள்
13 பிப்ரவரி, 2026
Friday of the Fifth Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
1 அரசர்கள் 11:29-32; 12:19
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 81:10-11, 12-13, 14-15
10⁽உங்களை எகிப்து நாட்டினின்று␢ அழைத்துவந்த␢ கடவுளாகிய ஆண்டவர் நானே;␢ உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்;␢ நான் அதை நிரப்புவேன்.⁾
11⁽ஆனால் என் மக்கள்␢ என் குரலுக்குச்␢ செவிசாய்க்கவில்லை;␢ இஸ்ரயேலர் எனக்குப்␢ பணியவில்லை.⁾
12⁽எனவே, அவர்கள் தங்கள்␢ எண்ணங்களின்படியே நடக்குமாறு,␢ அவர்களின் கடின இதயங்களிடம்␢ அவர்களை விட்டுவிட்டேன்.⁾
13⁽என் மக்கள் எனக்குச்␢ செவிசாய்த்திருந்தால்,␢ இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில்␢ நடந்திருந்தால்,␢ எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.⁾
14⁽நான் விரைவில்␢ அவர்கள் எதிரிகளை அடக்குவேன்,␢ என் கை அவர்களின்␢ பகைவருக்கு எதிராகத் திரும்பும்.⁾
15⁽ஆண்டவரை வெறுப்போர்␢ அவர்முன் கூனிக்குறுகுவர்;␢ அவர்களது தண்டனைக் காலம்␢ என்றென்றுமாய் இருக்கும்.⁾
Alleluia
திருத்தூதர் பணிகள் 16:14
14அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.
Gospel
மாற்கு 7:31-37
31மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.
32காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.
33இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.
34பிறகு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்றார்.
35உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
36இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.
37அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.