பிப்ரவரி 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
இன்றுக்கு

வாசகங்கள்

10 பிப்ரவரி, 2026

Memorial of Saint Scholastica, Virgin

அன்றைய திருப்பலி
Reading I

1 அரசர்கள் 8:22-23, 27-30

22பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்று கொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி 23அவர் மன்றாடியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர். 27கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்? 28என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்! 29‘என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்’ என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக! 30உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!
Responsorial Psalm

திருப்பாடல்கள் 84:3, 4, 5 and 10, 11

3⁽படைகளின் ஆண்டவரே!␢ என் அரசரே! என் கடவுளே!␢ உமது பீடங்களில்␢ அடைக்கலான் குருவிக்கு␢ வீடு கிடைத்துள்ளது;␢ தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்␢ சிட்டுக் குருவிகளுக்குக்␢ கூடும் கிடைத்துள்ளது.⁾ 4⁽உமது இல்லத்தில் தங்கியிருப்போர்␢ நற்பேறு பெற்றோர்;␢ அவர்கள் எந்நாளும் உம்மைப்␢ புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். (சேலா)⁾ 5⁽உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர்␢ பேறு பெற்றோர்;␢ அவர்களது உள்ளம் § சீயோனுக்குச் செல்லும்␢ நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.⁾ 10⁽வேற்றிடங்களில் வாழும்␢ ஆயிரம் நாள்களினும்␢ உம் கோவில் முற்றங்களில் தங்கும்␢ ஒருநாளே மேலானது;␢ பொல்லாரின் கூடாரங்களில்␢ குடியிருப்பதினும்,␢ என் கடவுளது இல்லத்தின்␢ வாயிற்காவலனாய் இருப்பதே␢ இனிமையானது.⁾ 11⁽ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர்␢ நமக்குத் கதிரவனும்␢ கேடயமுமாய் இருக்கின்றார்;␢ ஆண்டவர் அருளையும்␢ மேன்மையையும் அளிப்பார்;␢ மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு␢ நன்மையானவற்றை வழங்குவார்.⁾
Alleluia

திருப்பாடல்கள் 119:36, 29

36⁽உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம்␢ நாட்டங்கொள்ளச் செய்யும்;␢ தன்னலத்தை நாடவிடாதேயும்.⁾ 29⁽பொய் வழியை␢ என்னைவிட்டு விலக்கியருளும்;␢ உமது திருச்சட்டத்தை␢ எனக்குக் கற்றுத்தாரும்.⁾
Gospel

மாற்கு 7:1-13

1ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர். 2அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். 3பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; 4சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே* உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. 5ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர். 6அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ⁽‘இம்மக்கள் உதட்டினால் என்னைப்␢ போற்றுகின்றனர்;␢ இவர்கள் உள்ளமோ என்னை விட்டு␢ வெகு தொலையில் இருக்கிறது.⁾ 7⁽மனிதக் கட்டளைகளைக்␢ கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர்.␢ இவர்கள் என்னை வழிபடுவது வீண்’⁾ என்று அவர் எழுதியுள்ளார். 8நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார். 9மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள். 10‘உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! 11ஆனால், ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், 12அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. 13இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.⒫