பிப்ரவரி 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
இன்றுக்கு

வாசகங்கள்

24 பிப்ரவரி, 2026

Tuesday of the First Week of Lent

அன்றைய திருப்பலி
Reading I

எசாயா 55:10-11

10⁽மழையும் பனியும்␢ வானத்திலிருந்து இறங்கி வருகின்றன;␢ அவை நிலத்தை நனைத்து,␢ முளை அரும்பி வளரச் செய்து,␢ விதைப்பவனுக்கு விதையையும்␢ உண்பவனுக்கு உணவையும்␢ கொடுக்காமல்,␢ அங்குத் திரும்பிச் செல்வதில்லை.⁾ 11⁽அவ்வாறே, என் வாயிலிருந்து␢ புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.␢ அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி,␢ எதற்காக நான் அதை அனுப்பினேனோ␢ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல்␢ வெறுமையாய் என்னிடம்␢ திரும்பி வருவதில்லை.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 34:4-5, 6-7, 16-17, 18-19

4⁽துணைவேண்டி நான் ஆண்டவரை␢ மன்றாடினேன்; அவர் எனக்கு␢ மறுமொழி பகர்ந்தார்;␢ எல்லா வகையான அச்சத்தினின்றும்␢ அவர் என்னை விடுவித்தார்.⁾ 5⁽அவரை நோக்கிப் பார்த்தோர்␢ மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;␢ அவர்கள் முகம்␢ அவமானத்திற்கு உள்ளாகவில்லை.⁾ 6⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾ 7⁽ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை␢ அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.⁾ 16⁽ஆண்டவரின் முகமோ␢ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;␢ அவர், அவர்களின் நினைவே␢ உலகில் அற்றுப்போகச் செய்வார்.⁾ 17⁽நீதிமான்கள் மன்றாடும்போது,␢ ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;␢ அவர்களை அனைத்து␢ இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.⁾ 18⁽உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்␢ ஆண்டவர் இருக்கின்றார்;␢ நைந்த நெஞ்சத்தாரை␢ அவர் காப்பாற்றுகின்றார்.⁾ 19⁽நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;␢ அவை அனைத்தினின்றும்␢ ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.⁾
Verse Before the Gospel

மத்தேயு 4:4

4அவர் மறுமொழியாக, “⦃‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’⦄ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.
Gospel

மத்தேயு 6:7-15

7மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். 8நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில், நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். 9ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்:⁽‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,␢ உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!⁾ 10⁽உமது ஆட்சி வருக!␢ உமது திருவுளம் விண்ணுலகில்␢ நிறைவேறுவதுபோல␢ மண்ணுலகிலும் நிறைவேறுக!⁾ 11⁽இன்று தேவையான உணவை*␢ எங்களுக்குத் தாரும்.⁾ 12⁽எங்களுக்கு எதிராகக் குற்றம்␢ செய்தோரை நாங்கள்␢ மன்னித்துள்ளதுபோல␢ எங்கள் குற்றங்களை மன்னியும்.⁾ 13⁽எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,␢ தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.␢ [‘ஆட்சியும் வல்லமையும் மாட்சியும்␢ என்றென்றும் உமக்கே. ஆமென்.’]⁾ 14மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். 15மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.