வாசகங்கள்
1 பிப்ரவரி, 2026
Fourth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
செப்பனியா 2:3; 3:12-13
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 146:6-7, 8-9, 9-10
6⁽அவரே விண்ணையும் மண்ணையும்␢ கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும்␢ உருவாக்கியவர்;␢ என்றென்றும் நம்பிக்கைக்கு␢ உரியவராய் இருப்பவரும் அவரே!⁾
7⁽ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான␢ நீதியை நிலைநாட்டுகின்றார்;␢ பசித்திருப்போர்க்கு␢ உணவளிக்கின்றார்;␢ சிறைப்பட்டோர்க்கு␢ விடுதலை அளிக்கின்றார்.⁾
8⁽ஆண்டவர் பார்வையற்றோரின்␢ கண்களைத் திறக்கின்றார்;␢ தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;␢ நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.⁾
9⁽ஆண்டவர் அயல் நாட்டினரைப்␢ பாதுகாக்கின்றார்;␢ அனாதைப் பிள்ளைகளையும்␢ கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;␢ ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக்␢ கவிழ்த்துவிடுகின்றார்.⁾
10⁽சீயோனே! உன் கடவுள், என்றென்றும்,␢ எல்லாத் தலைமுறைகளுக்கும்␢ ஆட்சி செய்வார். அல்லேலூயா!⁾
Reading II
1 கொரிந்தியர் 1:26-31
26எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?
27ஆனால், கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.
28உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்.
29எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.
30அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.
31எனவே, மறைநூலில் எழுதியுள்ளவாறு, ⁽“பெருமை பாராட்ட விரும்புகிறவர்␢ ஆண்டவரைக் குறித்தே␢ பெருமை பாராட்டட்டும்.”⁾
Alleluia
மத்தேயு 5:12
12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
Gospel
மத்தேயு 5:1-12
1இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
2அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
3⁽“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு␢ அவர்களுக்கு உரியது.⁾
4⁽துயருறுவோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.⁾
5⁽கனிவுடையோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள்␢ நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.*⁾
6⁽நீதிநிலைநாட்டும்␢ வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்.⁾
7⁽இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.⁾
8⁽தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.⁾
9⁽அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில் அவர்கள்␢ கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.⁾
10⁽நீதியின் பொருட்டுத்␢ துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.⁾
11என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.