வாசகங்கள்
4 ஆகஸ்ட், 2026
Memorial of Saint John Vianney, Priest
அன்றைய திருப்பலி
Reading I
எரேமியா 30:1-2, 12-15, 18-22
1ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது:
2“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.
12⁽ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;␢ உனது காயத்தைக்␢ குணப்படுத்த முடியாது;␢ உனது புண் புரையோடிப்போனது.⁾
13⁽உனக்காக வாதிட எவனும் இல்லை;␢ உனது காயத்தை ஆற்ற␢ மருந்தே இல்லை;␢ உன்னைக் குணப்படுத்தவே முடியாது.⁾
14⁽உன் காதலர் அனைவரும்␢ உன்னை மறந்துவிட்டனர்;␢ உன்னை அவர்கள் தேடுவதே இல்லை;␢ மாற்றான் தாக்குவது போல␢ நான் உன்னைத் தாக்கினேன்;␢ கொடியோன் தண்டிப்பதுபோல␢ நான் உன்னைத் தண்டித்தேன்;␢ ஏனெனில் உனது குற்றம் பெரிது;␢ உன் பாவங்களோ எண்ணற்றவை.⁾
15⁽நீ நொறுக்கப்பட்டதை எண்ணி␢ ஏன் அழுகின்றாய்?␢ உனது வேதனையைத் தணிக்கமுடியாது;␢ ஏனெனில் உனது குற்றமோ பெரிது;␢ உன் பாவங்களோ எண்ணற்றவை;␢ எனவே இவற்றை எல்லாம்␢ நான் உனக்குச் செய்தேன்.⁾
18⁽ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;␢ அடிமைத் தனத்தினின்று␢ நான் யாக்கோபின் கூடாரங்களை␢ திரும்பக் கொணர்வேன்;␢ அவனுடைய உறைவிடங்கள்மீது␢ நான் இரக்கம் காட்டுவேன்;␢ அவற்றின் இடிபாடுகள்மேலேயே␢ நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்;␢ அரண்மனையும் அதற்குரிய␢ இடத்திலேயே அமைக்கப்படும்.⁾
19⁽அவர்களிடமிருந்து␢ நன்றிப் பாக்கள் எழும்பிவரும்;␢ மகிழ்ச்சியுறுவோரின்␢ ஆரவாரம் கேட்கும்.␢ அவர்களை நான்␢ பல்கிப் பெருகச் செய்வேன்;␢ அவர்கள் எண்ணிக்கையில்␢ குறைய மாட்டார்கள்.␢ நான் அவர்களைப்␢ பெருமைப் படுத்துவேன்;␢ இனி அவர்கள்␢ சிறுமையுற மாட்டார்கள்.⁾
20⁽அவர்களுடைய பிள்ளைகள்␢ முன்புபோல் இருப்பர்;␢ அவர்களது கூட்டமைப்பு␢ என் திருமுன் நிலை நாட்டப்படும்;␢ அவர்களை ஒடுக்குவோர்␢ அனைவரையும் தண்டிப்பேன்.⁾
21⁽அவர்களின் தலைவன்␢ அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்;␢ அவர்களை ஆள்பவன்␢ அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்;␢ அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்;␢ அவனும் என்னை அணுகிவருவான்;␢ ஏனெனில், என்னை அணுகிவர␢ வேறு யாருக்குத் துணிவு உண்டு?,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
22⁽நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்;␢ நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 102:16-18, 19-21, 29, 22-23
16⁽ஏனெனில் ஆண்டவர்␢ சீயோனைக் கட்டியெழுப்புவார்;␢ அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.⁾
17⁽திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு␢ அவர் செவிகொடுப்பார்;␢ அவர்களின் மன்றாட்டை அவமதியார்.⁾
18⁽இனி வரவிருக்கும் தலைமுறைக்கென␢ இது எழுதி வைக்கப்படட்டும்;␢ படைக்கப்படவிருக்கும் மக்கள்␢ ஆண்டவரைப் புகழட்டும்.⁾
19⁽ஆண்டவர் தம் மேலுலகத்␢ திருத்தலத்தினின்று␢ கீழே நோக்கினார்;␢ அவர் விண்ணுலகினின்று␢ வையகத்தைக் கண்ணோக்கினார்.⁾
20⁽அவர் சிறைப்பட்டோரின்␢ புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;␢ சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை␢ விடுவிப்பார்.⁾
21⁽சீயோனில் ஆண்டவரின் பெயர்␢ போற்றப்படும்.␢ எருசலேமில் அவர்தம் புகழ்␢ அறிவிக்கப்படும்.⁾
22⁽அப்போது, மக்களினங்களும்␢ அரசுகளும் ஒன்றுதிரண்டு␢ ஆண்டவரை வழிபடுவர்.⁾
23⁽என் வாழ்க்கைப் பாதையின் நடுவில்␢ ஆண்டவர் என் வலிமையைக்␢ குன்றச் செய்தார்; அவர்␢ என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.⁾
Alleluia
யோவான் 1:49
49நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
Gospel
மத்தேயு 14:22-36
22இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.
23மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.
24அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.
25இரவின் நான்காம் காவல்வேளையில்* இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.
26அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர்.
27உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்.⒫
28பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார்.
29அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.
30அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார்.
31இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார்.
32அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.
33படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர்.
34அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள்.
35இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப் புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.
36அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.