வாசகங்கள்
12 ஆகஸ்ட், 2026
Wednesday of the Nineteenth Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
எசேக்கியேல் 9:1-7; 10:18-22
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 113:1-2, 3-4, 5-6
1⁽அல்லேலூயா!␢ ஆண்டவரின் ஊழியர்களே,␢ அவரைப் புகழுங்கள்.␢ அவரது பெயரைப் போற்றுங்கள்.⁾
2⁽ஆண்டவரது பெயர்␢ வாழ்த்தப்பெறுவதாக!␢ இப்பொழுதும் எப்பொழுதும்␢ வாழ்த்தப்பெறுவதாக!⁾
3⁽கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை␢ ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!⁾
4⁽மக்களினங்கள் அனைத்திற்கும்␢ ஆண்டவர் மேலானவர்;␢ வானங்களையும்விட உயர்ந்து␢ அவரது மாட்சி.⁾
5⁽நம் கடவுளாகிய ஆண்டவருக்கு␢ நிகர் யார்?␢ அவர்போல வானளாவிய உயரத்தில்␢ வீற்றிருப்பவர் யார்?⁾
6⁽அவர் வானத்தையும் வையகத்தையும்␢ குனிந்து பார்க்கின்றார்;⁾
Alleluia
2 கொரிந்தியர் 5:19
19உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.⒫
Gospel
மத்தேயு 18:15-20
15“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
16இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.
17அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.
18மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
19❮19-20❯உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.ஏனெனில், இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
20Same as above