ஆகஸ்ட் 2026

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

23 ஆகஸ்ட், 2026

Twenty-first Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

எசாயா 22:19-23

19உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். 20அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, 21உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். 22அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்கமாட்டான். 23உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்;
Responsorial Psalm

திருப்பாடல்கள் 138:1-2, 2-3, 6, 8

1⁽ஆண்டவரே!␢ என் முழுமனத்துடன்␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ தெய்வங்கள் முன்னிலையில்␢ உம்மைப் புகழ்வேன்.⁾ 2⁽உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி␢ உம்மைத் தாள் பணிவேன்;␢ உம் பேரன்பையும்␢ உண்மையையும் முன்னிட்டு␢ உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;␢ ஏனெனில், அனைத்திற்கும் மேலாக␢ உம் பெயரையும் உம் வாக்கையும்␢ மேன்மையுறச் செய்துள்ளீர்.⁾ 3⁽நான் மன்றாடிய நாளில்␢ எனக்குச் செவிசாய்த்தீர்;␢ என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.⁾ 6⁽ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;␢ எனினும் நலிந்தோரைக்␢ கண்ணோக்குகின்றீர்;␢ ஆனால், செருக்குற்றோரைத்␢ தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்.⁾ 8⁽நீர் வாக்களித்த அனைத்தையும்␢ எனக்கெனச் செய்து முடிப்பீர்;␢ ஆண்டவரே! என்றும் உள்ளது␢ உமது பேரன்பு;␢ உம் கைவினைப் பொருளைக்␢ கைவிடாதேயும்.⁾
Reading II

உரோமையர் 11:33-36

33கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! 34⁽“ஏனெனில் ஆண்டவரின் மனத்தை␢ அறிபவர் யார்?␢ அவருக்கு அறிவுரையாளராய்␢ இருப்பவர் யார்?⁾ 35⁽தமக்குக் கைம்மாறாக␢ ஏதாவது கிடைக்கும் என␢ முன்னதாகவே அவரிடம்␢ கொடுத்து வைத்தவர் யார்?”⁾ 36அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
Alleluia

மத்தேயு 16:18

18எனவே, நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு*; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.
Gospel

மத்தேயு 16:13-20

13இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். 14அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். 15“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். 16❮16-17❯சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில், எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 17Same as above 18எனவே, நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு*; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். 20பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.