வாசகங்கள்
15 ஆகஸ்ட், 2026
Solemnity of the Assumption of the Blessed Virgin MaryMass during the Day (Mass During the Day)
Mass During the Day
Reading I
திருவெளிப்பாடு 11:19; 12:1-6, 10
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 45:10, 11, 12, 16
10⁽கேளாய் மகளே! கருத்தாய்க்␢ காதுகொடுத்துக் கேள்!␢ உன் இனத்தாரை மறந்துவிடு;␢ பிறந்தகம் மறந்துவிடு.⁾
11⁽உனது எழிலில்␢ நாட்டங்கொள்வார் மன்னர்;␢ உன் தலைவர் அவரே;␢ அவரைப் பணிந்திடு!⁾
12⁽தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;␢ செல்வமிகு சீமான்கள்␢ உன்னருள் வேண்டி நிற்பர்.⁾
16⁽உம் தந்தையரின் அரியணையில்␢ உம் மைந்தரே வீற்றிருப்பர்;␢ அவர்களை நீர் உலகுக்கெலாம்␢ இளவரசர் ஆக்கிடுவீர்.⁾
Reading II
1 கொரிந்தியர் 15:20-27
20ஆனால், இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
21ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.
22ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.
23ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.
24அதன்பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.
25எல்லாப் பகைவரையும் அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்.
26சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.
27ஏனெனில், “கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார்.” ஆனால், எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது.
Alleluia
:-
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
லூக்கா 1:39-56
39அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.
40அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
41மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
42அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!
43என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
44உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
45ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
46⦅அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:⦆
47⁽“ஆண்டவரை எனது உள்ளம்␢ போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.␢ என் மீட்பராம் கடவுளை நினைத்து␢ எனது மனம் பேருவகை கொள்கின்றது.⁾
48⁽ஏனெனில், அவர் தம் அடிமையின்␢ தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.␢ இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்␢ என்னைப் பேறுபெற்றவர் என்பர்.⁾
49⁽ஏனெனில், வல்லவராம் கடவுள்␢ எனக்கு அரும்பெரும் செயல்கள்␢ செய்துள்ளார்.␢ தூயவர் என்பதே அவரது பெயர்.⁾
50❮50-53❯⁽அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்␢ தலைமுறை தலைமுறையாய் அவர்␢ இரக்கம் காட்டி வருகிறார்.␢ அவர் தம் தோள் வலிமையைக்␢ காட்டியுள்ளார்;␢ உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்␢ சிதறடித்து வருகிறார்.␢ வலியோரை அரியணையினின்று␢ தூக்கி எறிந்துள்ளார்;␢ தாழ்நிலையில் இருப்போரை␢ உயர்த்துகிறார்.␢ பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;␢ செல்வரை வெறுங்கையராய்␢ அனுப்பிவிடுகிறார்.⁾
51Same as above
52Same as above
53Same as above
54❮54-55❯⁽மூதாதையருக்கு உரைத்தபடியே␢ அவர் ஆபிரகாமையும்␢ அவர்தம் வழி மரபினரையும்␢ என்றென்றும் இரக்கத்தோடு␢ நினைவில் கொண்டுள்ளார்;␢ தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்␢ துணையாக இருந்து வருகிறார்”.⁾⒫
55Same as above
56மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
Vigil Mass
Reading I
1 குறிப்பேடு 15:3-4, 15-16; 16:1-2
3ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார்.
4அவ்வாறே, தாவீது ஆரோனின் புதல்வரையும் லேவியரையும் ஒன்று திரட்டினார்.
15பின்பு, லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர்.⒫
16தாவீது, லேவியரின் தலைவர்களிடம் தங்கள் உறவின்முறையிலிருந்து தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளையிட்டார்.
1அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு, கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.
2தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 132:6-7, 9-10, 13-14
6⁽திருப்பேழை எப்ராத்தாவில்␢ இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்;␢ வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.⁾
7⁽“அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்!␢ வாருங்கள்;␢ அவரது திருவடிதாங்கி␢ முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.⁾
9⁽உம் குருக்கள் நீதியை␢ ஆடையென அணிவார்களாக!␢ உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!⁾
10⁽நீர் திருப்பொழிவு செய்த அரசரை,␢ உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப்␢ புறக்கணியாதேயும்.⁾
13⁽ஆண்டவர் சீயோனைத்␢ தேர்ந்தெடுத்தார்;␢ அதையே தம்␢ உறைவிடமாக்க விரும்பினார்.⁾
14⁽“இது என்றென்றும்␢ நான் இளைப்பாறும் இடம்;␢ இதை நான் விரும்பினதால்␢ இதையே என் உறைவிடமாக்குவேன்.⁾
Reading II
1 கொரிந்தியர் 15:54-57
54அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: ⁽“சாவு முற்றிலும் ஒழிந்தது;␢ வெற்றி கிடைத்தது.⁾
55⁽சாவே, உன் வெற்றி எங்கே?␢ சாவே உன் கொடுக்கு எங்கே?”⁾
56பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.
57ஆகவே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!⒫
Alleluia
லூக்கா 11:28
28அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.
Gospel
லூக்கா 11:27-28
27அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.
28அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.