ஆகஸ்ட் 2026

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

24 ஆகஸ்ட், 2026

Feast of Saint Bartholomew, Apostle

அன்றைய திருப்பலி
Reading I

திருவெளிப்பாடு 21:9-14

9இறுதியான அந்த ஏழு வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, “வா, ஆட்டுக்குட்டி மணந்துகொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்” என்று என்னிடம் கூறினார். 10தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டுசென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். 11அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல்போன்றும் படிகக்கல்போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. 12அதைச்சுற்றி பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. 13கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. 14நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 145:10-11, 12-13, 17-18

10⁽ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்␢ உமக்கு நன்றி செலுத்தும்;␢ உம்முடைய அன்பர்கள்␢ உம்மைப் போற்றுவார்கள்.⁾ 11⁽அவர்கள் உமது அரசின் மாட்சியை␢ அறிவிப்பார்கள்;␢ உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.⁾ 12⁽மானிடர்க்கு␢ உம் வல்லமைச் செயல்களையும்␢ உமது அரசுக்குரிய␢ மாட்சியின் பேரொளியையும்␢ புலப்படுத்துவார்கள்.⁾ 13⁽உமது அரசு␢ எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;␢ உமது ஆளுகை␢ தலைமுறை தலைமுறையாக உள்ளது.␢ ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்␢ உண்மையானவர்;␢ தம் செயல்கள் அனைத்திலும்␢ தூய்மையானவர்.⁾ 17⁽ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்␢ நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்␢ இரக்கச் செயல்களே.⁾ 18⁽தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,␢ உண்மையாய்த் தம்மை நோக்கி␢ மன்றாடும் யாவருக்கும்,␢ ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.⁾
Alleluia

யோவான் 1:49

49நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
Gospel

யோவான் 1:45-51

45பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். 46அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார். 47நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். 48நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். 49நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார். 50அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். 51மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.