வாசகங்கள்
2 ஆகஸ்ட், 2026
Eighteenth Sunday In Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
எசாயா 55:1-3
1⁽தாகமாய் இருப்பவர்களே,␢ நீங்கள் அனைவரும்␢ நீர்நிலைகளுக்கு வாருங்கள்;␢ கையில் பணமில்லாதவர்களே,␢ நீங்களும் வாருங்கள்;␢ தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,␢ வாருங்கள், காசு பணமின்றித்␢ திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.⁾
2⁽உணவாக இல்லாத ஒன்றிற்காக␢ நீங்கள் ஏன் பணத்தைச்␢ செலவிடுகின்றீர்கள்?␢ நிறைவு தராத ஒன்றிற்காய்␢ ஏன் உங்கள் உழைப்பை␢ வீணாக்குகிறீர்கள்?␢ எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்;␢ நல்லுணவை உண்ணுங்கள்;␢ கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.⁾
3⁽எனக்குச் செவிகொடுங்கள்,␢ என்னிடம் வாருங்கள்;␢ கேளுங்கள்; அப்பொழுது␢ நீங்கள் வாழ்வடைவீர்கள்.␢ நான் உங்களுடன் ஓர்␢ என்றுமுள உடன்படிக்கையைச்␢ செய்து கொள்வேன்;␢ தாவீதுக்கு நான் காட்டிய␢ மாறாத பேரன்பை␢ உங்களுக்கும் காட்டுவேன்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 145:8-9, 15-16, 17-18
8⁽ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;␢ எளிதில் சினம் கொள்ளாதவர்;␢ பேரன்பு கொண்டவர்.⁾
9⁽ஆண்டவர் எல்லாருக்கும்␢ நன்மை செய்பவர்;␢ தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்␢ இரக்கம் காட்டுபவர்.⁾
15⁽எல்லா உயிரினங்களின் கண்களும்␢ உம்மையே நோக்குகின்றன;␢ தக்க வேளையில் நீரே அவற்றிற்கு␢ உணவளிக்கின்றீர்.⁾
16⁽நீர் உமது கையைத் திறந்து␢ எல்லா உயிரினங்களின்␢ விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.⁾
17⁽ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்␢ நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்␢ இரக்கச் செயல்களே.⁾
18⁽தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,␢ உண்மையாய்த் தம்மை நோக்கி␢ மன்றாடும் யாவருக்கும்,␢ ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.⁾
Reading II
உரோமையர் 8:35, 37-39
35கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?
37ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்.
38ஏனெனில், சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ,
39உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.
Alleluia
மத்தேயு 4:4
4அவர் மறுமொழியாக, “⦃‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’⦄ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.
Gospel
மத்தேயு 14:13-21
13இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.
14இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.
15மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர்.
16இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார்.
17ஆனால், அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள்.
18அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.
19மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
20அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
21பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.