ஆகஸ்ட் 2026

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

10 ஆகஸ்ட், 2026

Feast of Saint Lawrence, Deacon and Martyr

அன்றைய திருப்பலி
Reading I

2 கொரிந்தியர் 9:6-10

6குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். 7ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். 8கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.⒫ 9⁽“ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி␢ வழங்கும்போது அவரது நீதி␢ என்றென்றும் நிலைத்திருக்கும்”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! 10விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 112:1-2, 5-6, 7-8, 9

1⁽அல்லேலூயா! ஆண்டவருக்கு␢ அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்;␢ அவர்தம் கட்டளைகளில்␢ அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.⁾ 2⁽அவர்களது வழிமரபு பூவுலகில்␢ வலிமைமிக்கதாய் இருக்கும்;␢ நேர்மையுள்ளோரின் தலைமுறை␢ ஆசிபெறும்.⁾ 5⁽மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர்␢ நன்மை அடைவர்;␢ அவர்கள் தம் அலுவல்களில்␢ நீதியுடன் செயல்படுவர்.⁾ 6⁽எந்நாளும் அவர்கள் அசைவுறார்;␢ நேர்மையுள்ளோர்␢ மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.⁾ 7⁽தீமையான செய்தி எதுவும்␢ அவர்களை அச்சுறுத்தாது;␢ ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால்␢ அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.⁾ 8⁽அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;␢ அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;␢ இறுதியில் தம் எதிரிகள் அழிவதை␢ அவர்கள் காண்பது உறுதி.⁾ 9⁽அவர்கள் வாரி வழங்கினர்;␢ ஏழைகளுக்கு ஈந்தனர்;␢ அவர்களது நீதி␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவர்களது வலிமை␢ மாட்சியுடன் மேலோங்கும்.⁾
Alleluia

யோவான் 8:12

12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel

யோவான் 12:24-26

24கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 25தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். 26எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.