ஆகஸ்ட் 2026

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

7 ஆகஸ்ட், 2026

Friday of the Eighteenth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

நாகூம் 2:1, 3; 3:1-3, 6-7

1⁽உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு␢ எதிராய் வருகின்றான்; கோட்டை␢ மதில்களில் வீரர்களை நிறுத்து;␢ வழிகளில் காவலர்களை அமர்த்து;␢ உம் இடையே வரிந்து கட்டிக்கொள்;␢ உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.⁾ 3⁽எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள்␢ சிவப்பானவை;␢ அவனுடைய போர்வீரர்␢ செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்;␢ போர் அணியில் இயங்கும்␢ தேர்ப்படையிலிருந்து␢ தீப்பொறி பறக்கின்றது;␢ குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன.⁾ 1⁽இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ␢ கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம்␢ பொய்களும் கொள்ளைப் பொருளுமே!␢ சூறையாடலுக்கு முடிவே இல்லை!⁾ 2⁽சாட்டையடிகளின் ஓசை!␢ சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி!␢ தாவிப் பாயும் புரவிகள்!␢ உருண்டோடும் தேர்கள்!⁾ 3⁽குதிரை வீரர்கள் பாய்ந்து␢ தாக்குகின்றனர்;␢ வாள் மின்னுகின்றது;␢ ஈட்டி பளபளக்கின்றது;␢ வெட்டுண்டவர்கள்␢ கூட்டமாய்க் கிடக்கின்றனர்;␢ பிணங்கள் குவிந்து கிடக்கின்றன;␢ செத்தவர்களுக்குக்␢ கணக்கே இல்லை;␢ அந்தப் பிணங்கள் மேல்␢ மனிதர் இடறிவிழுகின்றனர்.⁾ 6⁽அருவருப்பானவற்றை␢ உன்மீது எறிவேன்;␢ உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப்␢ பகடிப் பொருள் ஆக்குவேன்.⁾ 7⁽உன்னை நோக்குவோர் எல்லாரும்␢ உன்னிடமிருந்து பின்வாங்கி,␢ ‘நினிவே பாழாய்ப் போனது;␢ அவளுக்காகப் புலம்புவோர்␢ யாரேனும் உண்டோ?’␢ என்று சொல்வார்கள்.␢ உன்னைத் தேற்றுவோரை␢ எங்கே தேடுவேன்?⁾
Responsorial Psalm

இணைச் சட்டம் 32:35-36, 39, 41

35⁽பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும்␢ எனக்கு உரியன;␢ உரிய நாளில் அவர்களின் கால்கள்␢ தள்ளாடும்;␢ அவர்களது அழிவுநாள்␢ அண்மையில் உள்ளது;␢ அவர்களுக்கு வரப்போகும்␢ கொடுமைகள் தீவிரமாகின்றன.⁾ 36⁽அவர்கள் ஆற்றல் இழந்து␢ விட்டவர்கள் எனவும்␢ அடிமையோ குடிமகனோ␢ எவனுமில்லை எனவும்␢ காணும் போது ஆண்டவரே அவர்␢ மக்களுக்குத் தீர்ப்பிடுவார்;␢ அவர்தம் ஊழியர்களுக்காக␢ அவர் மனமிரங்கிடுவார்.⁾ 39⁽நானே இருக்கிறவர்! என்னைத்␢ தவிர வேறு தெய்வங்கள் இல்லை␢ என்பதை இப்பொழுது␢ உணர்ந்து கொள்ளுங்கள்!␢ கொல்பவரும் நானே;␢ உயிரளிப்பவரும் நானே!␢ காயப்படுத்துபவரும் நானே;␢ குணமாக்குபவரும் நானே!␢ என் கைகளிலிருந்து விடுவிப்பார்␢ எவரும் இரார்.⁾ 41⁽மின்னும் என் வாளை நான் தீட்டி,␢ நீதித் தீர்ப்பை என் கையில்␢ எடுக்கும்போது␢ என் பகைவரைப் பழி வாங்கி␢ என்னைப் பகைப்பவருக்குப்␢ பதிலடி கொடுப்பேன்.⁾
Alleluia

மத்தேயு 5:10

10⁽நீதியின் பொருட்டுத்␢ துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.⁾
Gospel

மத்தேயு 16:24-28

24பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 25ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். 26மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? 27மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார். 28நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.