ஆகஸ்ட் 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

2 ஆகஸ்ட், 2028

Ordinary Weekday/ Eusebius of Vercelli, Bishop/ Peter Julianeymard, Priest

Peter Julianeymard, Priest
First Reading

எரேமியா 15: 10, 16-21

10நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு; நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள். 16⁽நான் உம் சொற்களைக்␢ கண்டடைந்தேன்;␢ அவற்றை உட்கொண்டேன்;␢ உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன;␢ என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.␢ ஏனெனில், படைகளின் ஆண்டவரே,␢ உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.⁾ 17⁽களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து␢ நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை.␢ உம் கை என்மேல் இருந்ததால்␢ நான் தனியனாய் இருந்தேன்.␢ சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.⁾ 18⁽எனக்கு ஏன் தீராத வேதனை?␢ குணமாகாக் கொடிய காயம்?␢ நீர் எனக்குக் கானல் நீரென,␢ ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!⁾ 19⁽எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “நீ திரும்பி வந்தால் நான் உன்னை␢ முன்னைய நிலைக்குக்␢ கொண்டு வருவேன்.␢ என்முன் வந்து நிற்பாய்;␢ பயனில நீக்கிப் பயனுள பேசின்,␢ நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்.␢ அவர்கள் உன்னிடம்␢ திரும்பி வருவார்கள்;␢ நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.⁾ 20⁽நான் உன்னை அவர்கள்முன்␢ வலிமை வாய்ந்த␢ வெண்கலச் சுவராக்குவேன்;␢ அவர்கள் உனக்கு எதிராய்ப்␢ போராடுவார்கள்; ஆனால்,␢ உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்;␢ ஏனெனில் உன்னை␢ விடுவிக்கவும் காக்கவும்␢ நான் உன்னோடு இருக்கிறேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾ 21⁽தீயோரின் கையினின்று␢ நான் உன்னைக் காப்பேன்;␢ முரடரின் பிடியினின்று␢ உன்னை மீட்பேன்.”⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 59: 2-3, 4, 10-11, 17, 18

2⁽தீமை செய்வோரிடமிருந்து␢ எனக்கு விடுதலை அளித்தருளும்;␢ கொலைவெறியரிடமிருந்து␢ என்னைக் காத்தருளும்.⁾ 3⁽ஏனெனில், அவர்கள் என்னைக்␢ கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்;␢ கொடியவர் என்னைத் தாக்கத்␢ திட்டமிட்டுள்ளனர்;␢ நானோ, ஆண்டவரே!␢ குற்றம் ஏதும் இழைக்கவில்லை;␢ பாவம் ஏதும் செய்யவில்லை;⁾ 4⁽என்னிடம் குற்றமில்லாதிருந்தும்,␢ அவர்கள் ஓடிவந்து␢ என்னைத் தாக்க முனைகின்றனர்;␢ என்னை எதிர்கொள்ளுமாறு␢ எழுந்தருளும்;␢ என்னைக் கண்ணோக்கும்,⁾ 10⁽என் கடவுள் தமது பேரன்பால்␢ என்னை எதிர்கொள்ள வருவார்;␢ கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை␢ நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.⁾ 11⁽அவர்களை ஒரேயடியாய்க்␢ கொன்று விடாதேயும்;␢ இல்லையேல், உம் வல்லமையை␢ என் மக்கள் மறந்துவிடுவர்;␢ என் தலைவரே! எங்கள் கேடயமே!␢ அவர்களை உமது வலிமையால்␢ நிலைகுலையச் செய்யும்.⁾ 17⁽என் ஆற்றல் நீரே!␢ உம்மைப் போற்றிப் பாடுவேன்;␢ ஏனெனில், கடவுள் எனக்கு அரண்;␢ கடவுளே எனக்குப் பேரன்பு!⁾
Alleluia

யோவான் 15: 15b

15இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
Gospel

மத்தேயு 13: 44-46

44“ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். 45❮45-46❯“வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். 46Same as above