ஆகஸ்ட் 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

28 ஆகஸ்ட், 2028

Augustine, Bishop, Doctor Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

2 தெசலோனிக்கர் 1: 1-5, 11-12

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 96: 1-2a, 2b-3, 4-5

1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾ 2⁽ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;␢ அவர் பெயரை வாழ்த்துங்கள்;␢ அவர் தரும் மீட்பை␢ நாள்தோறும் அறிவியுங்கள்.⁾ 3⁽பிற இனத்தார்க்கு␢ அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;␢ அனைத்து மக்களினங்களுக்கும்␢ அவர்தம் வியத்தகு செயல்களை § அறிவியுங்கள்.⁾ 4⁽ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;␢ பெரிதும் போற்றத் தக்கவர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக␢ அஞ்சுதற்கு உரியவர் அவரே.⁾ 5⁽மக்களினங்களின் தெய்வங்கள்␢ அனைத்தும் வெறும் சிலைகளே;␢ ஆண்டவரோ␢ விண்ணுலகைப் படைத்தவர்.⁾
Alleluia

யோவான் 10: 27

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel

மத்தேயு 23: 13-22

13“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை; 14[*]⒫ 15“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.”⒫ 16“குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். 17குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? 18யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். 19குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா? 20எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். 21திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். 22வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.”⒫