ஆகஸ்ட் 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

22 ஆகஸ்ட், 2028

Queenship of the Blessed Virgin Mary Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

எசேக்கியேல் 28: 1-10

1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 2⁽மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:␢ உன் இதயத்தின் செருக்கில்,␢ ‘நானே கடவுள்;␢ நான் கடல் நடுவே␢ கடவுளின் அரியணையில்␢ வீற்றிருக்கிறேன்’␢ என்று சொல்கின்றாய், ஆனால்␢ நீ கடவுளைப்போல்␢ அறிவாளியாக இருப்பதாக␢ எண்ணிடினும்,␢ நீ கடவுளல்ல; மனிதனே!⁾ 3⁽தானியேலை விட நீ அறிவாளிதான்!␢ மறைபொருள் எதுவும்␢ உனக்கு மறைவாயில்லை!⁾ 4⁽உன் ஞானத்தாலும் அறிவாலும்␢ உனக்குச் செல்வம் சேர்த்தாய்;␢ உன் கருவூலத்தில் பொன்னையும்␢ வெள்ளியையும் குவித்தாய்.⁾ 5⁽உன் வாணிபத் திறமையால்␢ உன் செல்வத்தைப் பெருக்கினாய்;␢ உன் செல்வத்தினாலோ␢ உன் இதயம் செருக்குற்றது.⁾ 6⁽ஆகவே, தலைவராகிய ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகிறார்:␢ கடவுளைப்போல் அறிவாளி என␢ உன்னைக் கருதிக் கொள்வதால்,⁾ 7⁽மக்களினங்களில்␢ மிகவும் கொடியோரான அந்நியரை␢ உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்;␢ அவர்கள் உன் அழகுக்கும்␢ ஞானத்திற்கும் எதிராக␢ உருவிய வாளுடன் வருவர்;␢ உன் பெருமையைக் குலைப்பர்.⁾ 8⁽படு குழியில் தள்ளுவர் உன்னை;␢ கடல் நடுவே மூழ்கிச்␢ சாவோரெனச் சாவாய் நீயே!⁾ 9⁽அப்போது உன்னைக்␢ கொல்வோரின் நடுவில்␢ ‘நானே கடவுள்’ என்று சொல்வாயோ?␢ உன்னைக் குத்திக்␢ கிழிப்போரின் கையில்␢ நீ கடவுளாக அல்ல,␢ மனிதனாகவே இருப்பாய்.⁾ 10⁽விருத்தசேதனம்␢ செய்யப்படாதவனைப்போல்␢ அன்னியர் கையால் நீ சாவாய்.␢ நானே உரைத்தேன், என்கிறார்␢ தலைவராகிய ஆண்டவர்.⁾
Responsorial Psalm

இணைச் சட்டம் 32: 26-27ab, 27cd-28, 30, 35cd-36ab

26⁽நான் சொன்னேன்: அவர்களை␢ எத்திக்கிலும் சிதறடிப்பேன்;␢ அவர்களது நினைவு␢ மனிதரிடமிருந்து␢ அற்றுப் போகச் செய்வேன்.⁾ 27⁽ஆயினும், ‘எங்கள் கைகள்␢ வலிமையானவை!␢ இதையெல்லாம் ஆண்டவர்␢ செய்யவில்லை!’ என்று␢ அவர்களின் பகைவர்␢ திரித்துப் பேசுவர் என்பதாலும்␢ பகைவனின் பழிச் சொல்லுக்கு␢ அஞ்சியும் வாளாவிருந்தேன்.⁾ 28⁽அவர்கள் புத்தி கெட்ட மக்கள்;␢ அவர்களிடம் விவேகம் சிறிதும்␢ இல்லை.⁾ 30⁽ஒரே ஆள்␢ ஆயிரம் பேரைத் துரத்துவதும்␢ இரண்டு பேர்␢ பதினாயிரம் பேரை விரட்டுவதும்␢ அவர்களது பாறை அவர்களை␢ விற்றுவிட்டதாலன்றோ?␢ அவர்களின் கடவுள் அவர்களைக்␢ கைவிட்டதாலன்றோ?⁾ 35⁽பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும்␢ எனக்கு உரியன;␢ உரிய நாளில் அவர்களின் கால்கள்␢ தள்ளாடும்;␢ அவர்களது அழிவுநாள்␢ அண்மையில் உள்ளது;␢ அவர்களுக்கு வரப்போகும்␢ கொடுமைகள் தீவிரமாகின்றன.⁾ 36⁽அவர்கள் ஆற்றல் இழந்து␢ விட்டவர்கள் எனவும்␢ அடிமையோ குடிமகனோ␢ எவனுமில்லை எனவும்␢ காணும் போது ஆண்டவரே அவர்␢ மக்களுக்குத் தீர்ப்பிடுவார்;␢ அவர்தம் ஊழியர்களுக்காக␢ அவர் மனமிரங்கிடுவார்.⁾
Alleluia

2 கொரிந்தியர் 8: 9

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 19: 23-30

23இயேசு தம் சீடரிடம், “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். 24மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.⒫ 25சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். 26இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளால் எல்லாம் இயலும்” என்றார். 27அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார். 28அதற்கு இயேசு, “புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். 29மேலும், என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர். 30ஆனால், முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார்.