ஆகஸ்ட் 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

19 ஆகஸ்ட், 2028

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary/ John Eudes, Priest, Religious Founder

John Eudes, Priest, Religious Founder
First Reading

எசேக்கியேல் 18: 1-10, 13b, 30-32

1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. 2“புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்” என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன? 3என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது. 4உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.⒫ 5ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால், 6மலைகளின் மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால், 7அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால், 8வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால், 9என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகெண்டால், அவன் நீதிமான் ஆவான்; அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.⒫ 10ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும் முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால், 13வட்டிக்குக் கொடுப்பவனாகவும், கொடுத்ததற்கு அதிகமாக வாங்குபவனாகவும் இருந்தால், அவன் வாழ்வானோ? அவன் வாழ மாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும். 30எனவே, இஸ்ரயேல் வீட்டாரே! ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது. 31எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்? 32எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 51: 12-13, 14-15, 18-19

12⁽உம் மீட்பின் மகிழ்ச்சியை␢ மீண்டும் எனக்கு அளித்தருளும்;␢ தன்னார்வ மனம் தந்து␢ என்னைத் தாங்கியருளும்.⁾ 13⁽அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு␢ உம் வழிகளைக் கற்பிப்பேன்;␢ பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.⁾ 14⁽கடவுளே! எனது மீட்பின் கடவுளே!␢ இரத்தப் பழியினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ அப்பொழுது, என் நா␢ உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.⁾ 15⁽என் தலைவரே!␢ என் இதழ்களைத் திறந்தருளும்;␢ அப்பொழுது, என் வாய்␢ உமக்குப் புகழ் சாற்றிடும்.⁾ 18⁽சீயோனுக்கு இன்முகம் காட்டி␢ நன்மை செய்யும்;␢ எருசலேமின் மதில்களை␢ மீண்டும் கட்டுவீராக!⁾ 19⁽அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்␢ முறையான பலிகளை விரும்புவீர்;␢ மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்␢ பலியாகச் செலுத்தப்படும்.⁾
Alleluia

மத்தேயு 11: 25

25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel

மத்தேயு 19: 13-15

13சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். 14ஆனால், இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார். 15அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.