ஆகஸ்ட் 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

29 ஆகஸ்ட், 2028

Martyrdom of John the Baptist Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

2 தெசலோனிக்கர் 2: 1-3a, 14-17

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 96: 10, 11-12, 13

10⁽வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;␢ ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகு உறுதியாக␢ நிலைநிறுத்தப்பட்டுள்ளது;␢ அது அசைவுறாது;␢ அவர் மக்களினங்களை␢ நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.⁾ 11⁽விண்ணுலகம் மகிழ்வதாக;␢ மண்ணுலகம் களிகூர்வதாக;␢ கடலும் அதில் நிறைந்துள்ளனவும்␢ முழங்கட்டும்.⁾ 12⁽வயல்வெளியும் அதில் உள்ள␢ அனைத்தும் களிகூரட்டும்;␢ அப்பொழுது, காட்டில் உள்ள␢ அனைத்து மரங்களும்␢ அவர் திருமுன் களிப்புடன் பாடும்.⁾ 13⁽ஏனெனில் அவர் வருகின்றார்;␢ மண்ணுலகிற்கு␢ நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;␢ நிலவுலகை நீதியுடனும்␢ மக்களினங்களை உண்மையுடனும்␢ அவர் தீர்ப்பிடுவார்.⁾
Alleluia

மத்தேயு 5: 10

10⁽நீதியின் பொருட்டுத்␢ துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.⁾
Gospel

மாற்கு 6: 17-29

17இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். 18ஏனெனில், யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லிவந்தார். 19அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால், அவளால் இயலவில்லை. 20ஏனெனில், யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.⒫ 21ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். 22அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். 23“நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான். 24அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன்தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள். 25உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். 26இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும், விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. 27உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, 28அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். 29இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.