ஆகஸ்ட் 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

14 ஆகஸ்ட், 2028

Maximilian Mary Kolbe, Priest, Martyr Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

எசேக்கியேல் 1: 2-5, 24-28c

2அந்த மாதத்தின் ஐந்தாம் நாளன்று — யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு — 3கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது. 4நான் உற்றுப்பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப்பிழம்பையும், அத்தீம்பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன். 5அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது. 24அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப்படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன. 25அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது. 26அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது. 27அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும். நெருப்பு சூழ்ந்திருப்பதுபோன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்புறம் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன். 28சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது. இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி.⒯இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 148: 1-2, 11-12, 13, 14

1⁽அல்லேலூயா!␢ விண்ணுலகில் உள்ளவையே,␢ ஆண்டவரைப் போற்றுங்கள்;␢ உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.⁾ 2⁽அவருடைய தூதர்களே,␢ நீங்கள் யாவரும்␢ அவரைப் போற்றுங்கள்;␢ அவருடைய படைகளே,␢ நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.⁾ 11⁽உலகின் அரசர்களே,␢ எல்லா மக்களினங்களே,␢ தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,⁾ 12⁽இளைஞரே, கன்னியரே,␢ முதியோரே மற்றும் சிறியோரே,␢ நீங்கள் எல்லாரும்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்.⁾ 13⁽அவர்கள் ஆண்டவரின் பெயரைப்␢ போற்றுவார்களாக;␢ அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது;␢ அவரது மாட்சி␢ விண்ணையும் மண்ணையும் கடந்தது.⁾ 14⁽அவர் தம் மக்களின் ஆற்றலை␢ உயர்வுறச் செய்தார்;␢ அவருடைய அனைத்து அடியாரும்␢ அவருக்கு நெருங்கிய␢ அன்பார்ந்த மக்களாகிய␢ இஸ்ரயேல் மக்களும்␢ அவரைப் போற்றுவார்கள்.␢ அல்லேலூயா!⁾
Alleluia

2 தெசலோனிக்கர் 2: 14

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 17: 22-27

22கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார். 23அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால், அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள். 24அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா* தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர். 25அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார். 26“மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. 27ஆயினும், நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே, நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக்* காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார்.