வாசகங்கள்
5 நவம்பர், 2028
Thirty-First Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
சாலமோனின் ஞானம் 11: 22 - 12: 2
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 145: 1-2, 8-9, 10-11, 13-14
1⁽என் கடவுளே, என் அரசே!␢ உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் போற்றுவேன்.⁾
2⁽நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் புகழ்வேன்.⁾
8⁽ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;␢ எளிதில் சினம் கொள்ளாதவர்;␢ பேரன்பு கொண்டவர்.⁾
9⁽ஆண்டவர் எல்லாருக்கும்␢ நன்மை செய்பவர்;␢ தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்␢ இரக்கம் காட்டுபவர்.⁾
10⁽ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்␢ உமக்கு நன்றி செலுத்தும்;␢ உம்முடைய அன்பர்கள்␢ உம்மைப் போற்றுவார்கள்.⁾
11⁽அவர்கள் உமது அரசின் மாட்சியை␢ அறிவிப்பார்கள்;␢ உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.⁾
13⁽உமது அரசு␢ எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;␢ உமது ஆளுகை␢ தலைமுறை தலைமுறையாக உள்ளது.␢ ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்␢ உண்மையானவர்;␢ தம் செயல்கள் அனைத்திலும்␢ தூய்மையானவர்.⁾
14⁽தடுக்கி விழும் யாவரையும்␢ ஆண்டவர் தாங்குகின்றார்.␢ தாழ்த்தப்பட்ட யாவரையும்␢ தூக்கிவிடுகின்றார்.⁾
Second Reading
2 தெசலோனிக்கர் 1: 11 - 2: 2
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
யோவான் 3: 16
16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
Gospel
லூக்கா 19: 1-10
1இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.
2அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.
3இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.
4அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.
5இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.
6அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.
7இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர்.
8சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்.
9இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில், இவரும் ஆபிரகாமின் மகனே!
10இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.