நவம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

12 நவம்பர், 2028

Thirty-Second Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

2 மக்கபேயர் 7: 1-2, 9-14

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 17: 1, 5-6, 8, 15

1⁽ஆண்டவரே, என் வழக்கின்␢ நியாயத்தைக் கேட்டருளும்;␢ என் வேண்டுதலை உற்றுக் கேளும்;␢ வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்␢ என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.⁾ 5⁽என் நடத்தை␢ உம் பாதைகளில் அமைந்துள்ளது;␢ என் காலடிகள்␢ உம் வழியினின்று பிறழவில்லை.⁾ 6⁽இறைவா, நான் உம்மை நோக்கிக்␢ கூப்பிடுகின்றேன்; ஏனெனில், § நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.␢ என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;␢ என் விண்ணப்பத்திற்குச் § செவிசாய்த்தருளும்.⁾ 8⁽உமது கண்ணின் மணியென␢ என்னைக் காத்தருளும்;␢ உம்முடைய சிறகுகளின் நிழலில்␢ என்னை மூடிக்கொள்ளும்.⁾ 15⁽நானோ நேர்மையில் நிலைத்திருந்து␢ உமது முகம் காண்பேன்;␢ விழித்தெழும்போது,␢ உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.⁾
Second Reading

2 தெசலோனிக்கர் 2: 16 - 3: 5

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

திருவெளிப்பாடு 1: 5a, 6b

5Same as above 6ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.
Gospel

லூக்கா 20: 27-38

27உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, 28“போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். 29இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். 30இரண்டாம், 31மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; 32கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். 33அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர். 34அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். 35ஆனால், வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. 36இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. 37இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ⁽‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’⁾ என்று கூறியிருக்கிறார். 38அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.