வாசகங்கள்
26 நவம்பர், 2028
Christ the King Solemnity (Thirty-Fourth and Last Sunday in Ordinary Time)
அன்றைய திருப்பலி
First Reading
2 சாமுவேல் 5: 1-3
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 122: 1-2, 3-4ab, 4cd-5
1⁽“ஆண்டவரது இல்லத்திற்குப்␢ போவோம்”, என்ற அழைப்பை␢ நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.⁾
2⁽எருசலேமே! இதோ,␢ நாங்கள் அடியெடுத்து வைத்து␢ உன் வாயில்களில் நிற்கின்றோம்.⁾
3⁽எருசலேம் செம்மையாக␢ ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.⁾
4⁽ஆண்டவரின் திருக்குலத்தார்␢ அங்கே செல்கின்றனர்;␢ இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட␢ கட்டளைக்களுக்கிணங்க␢ ஆண்டவரது பெயருக்கு அவர்கள்␢ நன்றி செலுத்தச் செல்வார்கள்.⁾
5⁽அங்கே நீதி வழங்க␢ அரியணைகள் இருக்கின்றன.␢ அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.⁾
Second Reading
கொலோசையர் 1: 12-20
12தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்.
13அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்.
14அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.⒫
15⁽அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்;␢ படைப்பனைத்திலும் தலைப்பேறு.⁾
16⁽ஏனெனில், விண்ணிலுள்ளவை,␢ மண்ணிலுள்ளவை,␢ கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை,␢ அரியணையில் அமர்வோர்,␢ தலைமை தாங்குவோர், ஆட்சியாளர்,␢ அதிகாரம் கொண்டோர்␢ ஆகிய அனைவரும்*␢ அவரால் படைக்கப்பட்டனர்.␢ அனைத்தும் அவர் வழியாய்␢ அவருக்காகப் படைக்கப்பட்டன.⁾
17⁽அனைத்துக்கும் முந்தியவர் அவரே;§ அனைத்தும் அவரோடிணைந்து␢ நிலைபெறுகின்றன.⁾
18⁽திருச்சபையாகிய உடலுக்குத்␢ தலையும் தொடக்கமும் அவரே.␢ எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு␢ இறந்து உயிர்த்தெழுவோருள்␢ அவர் தலைப்பேறு ஆனார்.⁾
19⁽தம் முழுநிறைவும்␢ அவருள் குடிகொள்ளக்␢ கடவுள் திருவுளம் கொண்டார்.⁾
20⁽சிலுவையில்␢ இயேசு சிந்திய இரத்தத்தால்␢ அமைதியை நிலைநாட்டவும்␢ விண்ணிலுள்ளவை,␢ மண்ணிலுள்ளவை அனைத்தையும்␢ அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும்␢ கடவுள் திருவுளம் கொண்டார்.⁾⒫
Alleluia
மாற்கு 11: 9, 10
9முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ⁽“ஓசன்னா!* ஆண்டவர் பெயரால்␢ வருகிறவர் போற்றப்பெறுக!⁾
10⁽வரவிருக்கும் நம் தந்தை␢ தாவீதின் அரசு போற்றப்பெறுக!␢ உன்னதத்தில் ஓசன்னா!”⁾ என்று ஆர்ப்பரித்தனர்.⒫
Gospel
லூக்கா 23: 35-43
35மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்” என்று கேலிசெய்தார்கள்.
36❮36-37❯படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்று எள்ளி நகையாடினர்.⒫
37Same as above
38“இவன் யூதரின் அரசன்” என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று “என்று அவரைப் பழித்துரைத்தான்.
40ஆனால், மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.
41நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.
42பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான்.
43அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.⒫