வாசகங்கள்
6 நவம்பர், 2028
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
பிலிப்பியர் 2: 1-4
1எனவே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா?
2அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.
3கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.
4நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 131: 1bcde, 2, 3
1⁽ஆண்டவரே! என் உள்ளத்தில்␢ இறுமாப்பு இல்லை!␢ என் பார்வையில் செருக்கு இல்லை;␢ எனக்கு மிஞ்சின அரிய, பெரிய,␢ செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.⁾
2⁽மாறாக, என் நெஞ்சம்␢ நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது;␢ தாய்மடி தவழும் குழந்தையென␢ என் நெஞ்சம் என்னகத்தே␢ அமைதியாயுள்ளது.⁾
3⁽இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும்␢ ஆண்டவரையே நம்பியிரு!⁾
Alleluia
யோவான் 8: 31b-32
31இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;
32உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார்.⒫
Gospel
லூக்கா 14: 12-14
12பிறகு, தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.
13மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.
14அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால், உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.