நவம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

9 நவம்பர், 2028

Dedication of the Lateran Basilica Inrome Feast

அன்றைய திருப்பலி
First Reading

எசேக்கியேல் 47: 1-2, 8-9, 12

1அம்மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. 2அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது. 8அவர் என்னிடம் உரைத்தது: “இத் தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். 9இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும். 12பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 46: 2-3, 5-6, 8-9

2⁽ஆகையால், நிலவுலகம்␢ நிலைகுலைந்தாலும்,␢ மலைகள் ஆழ்கடலில்␢ அதிர்ந்து நடுங்கினாலும்,⁾ 3⁽கடலின் அலைகள் கொந்தளித்துப்␢ பொங்கினாலும், அவற்றின் பெருக்கால்␢ குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும்␢ எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா)⁾ 5⁽அந்நகரின் நடுவில்␢ கடவுள் இருக்கின்றார்;␢ அது ஒருபோதும் நிலைகுலையாது;␢ வைகறைதோறும் கடவுள் துணை␢ அதற்கு உண்டு.⁾ 6⁽வேற்றினத்தார் கலக்கமுற்றனர்;␢ அரசுகள் ஆட்டம் கண்டன;␢ கடவுளின் குரல் முழங்கிற்று;␢ பூவுலகம் கரைந்தது.⁾ 8⁽வாரீர்! ஆண்டவரின்␢ செயல்களைக் காணீர்!␢ அவர் உலகில் ஆற்றியுள்ள␢ திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!⁾ 9⁽உலகின் கடையெல்லைவரை␢ போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்;␢ வில்லை ஒடிக்கின்றார்;␢ ஈட்டியை முறிக்கின்றார்.␢ தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.⁾
Second Reading

1 கொரிந்தியர் 3: 9c-11, 16-17

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

2 குறிப்பேடு 7: 16

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

யோவான் 2: 13-22

13யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; 14கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; 15அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். 16அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். 17அப்போது அவருடைய சீடர்கள். ⦃“உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் § என்னை எரித்துவிடும்”⦄ என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். 18யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். 19இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார். 20அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?” என்று கேட்டார்கள். 21ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். 22அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.