வாசகங்கள்
15 நவம்பர், 2028
Ordinary Weekday/ Albert the Great, Bishop, Religious, Doctor
Albert the Great, Bishop, Religious, Doctor
First Reading
தீத்து 3: 1-7
1நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும் அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்.
2எவரையும் பழித்துரைக்கலாகாது சண்டையிடலாகாது கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும்.
3ஏனெனில், நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம்; கீழ்ப்படியாமல் இருந்தோம்; நெறிதவறிச் சென்றோம்; தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்; தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம்; காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்.
4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,
5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புது பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.
6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்.
7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 23: 1b-3a, 3bc-4, 5, 6
1⁽ஆண்டவரே என் ஆயர்;␢ எனக்கேதும் குறையில்லை.⁾
2⁽பசும்புல் வெளிமீது எனை அவர்␢ இளைப்பாறச் செய்வார்;␢ அமைதியான நீர்நிலைகளுக்கு␢ எனை அழைத்துச் செல்வார்.⁾
3⁽அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;␢ தம் பெயர்க்கேற்ப␢ எனை நீதிவழி நடத்திடுவார்;⁾
4⁽மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்␢ நான் நடக்க நேர்ந்தாலும்,␢ நீர் என்னோடு இருப்பதால்␢ எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;␢ உம் கோலும் நெடுங்கழியும்␢ என்னைத் தேற்றும்.⁾
5⁽என்னுடைய எதிரிகளின் கண் முன்னே␢ எனக்கொரு விருந்தினை␢ ஏற்பாடு செய்கின்றீர்;␢ என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;␢ எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.⁾
6⁽உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்␢ உம் அருள் நலமும் பேரன்பும்␢ என்னைப் புடைசூழ்ந்து வரும்;␢ நானும் ஆண்டவரின் இல்லத்தில் § நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.⁾
Alleluia
1 தெசலோனிக்கர் 5: 18
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
லூக்கா 17: 11-19
11இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
12ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,
13“ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
14அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.
15அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;
16அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
17இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
18கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
19பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.