நவம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

24 நவம்பர், 2028

Andrew Dung-lac, Priest, Martyr, and Companions, Martyrs Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

திருவெளிப்பாடு 10: 8-11

8விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, “கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்” என்றது.⒫ 9நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப்போல் இனிக்கும்” என்று என்னிடம் சொன்னார்.⒫ 10உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப்போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது. 11“பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர்பற்றி நீ மீண்டும் இறைவாக்குரைக்க வேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 119: 14, 24, 72, 103, 111, 131

14⁽பெருஞ்செல்வத்தில்␢ மகிழ்ச்சி அடைவதுபோல்,␢ நான் உம் ஒழுங்குமுறைகளின்படி␢ நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.⁾ 24⁽ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள்␢ எனக்கு இன்பம் தருகின்றன;␢ அவையே எனக்கு அறிவுரையாளர்.⁾ 72⁽நீர் திருவாய் மலர்ந்த சட்டம்,␢ ஆயிரக்கணக்கான பொன்,␢ வெள்ளிக் காசுகளைவிட␢ எனக்கு மேலானது.⁾ 103⁽உம் சொற்கள் என் நாவுக்கு␢ எத்துணை இனிமையானவை!␢ என் வாய்க்குத்␢ தேனினும் இனிமையானவை.⁾ 111⁽உம் ஒழுங்குமறைகளை என்றும்␢ என் உரிமைச் சொத்தாய்க்␢ கொண்டுள்ளேன்.␢ ஆகவே, அவை என் இதயத்தை␢ மகிழ்விக்கின்றன.⁾ 131⁽வாயை ‛ஆ’வெனத் திறக்கின்றேன்;␢ பெருமூச்சு விடுகின்றேன்;␢ ஏனெனில், உம் கட்டளைகளுக்காக␢ ஏங்குகின்றேன்.⁾
Alleluia

யோவான் 10: 27

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel

லூக்கா 19: 45-48

45இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். 46அவர்களிடம், ⁽“ ‘என் இல்லம் இறைவேண்டலின் வீடு’⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று கூறினார். 47இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். 48ஆனால், என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால், மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.