நவம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

8 நவம்பர், 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

பிலிப்பியர் 2: 12-18

12என் அன்பர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள்; நான் உங்களிடம் வந்தபோது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக உங்களோடு இல்லாத இப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். எனவே, நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள். 13ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.⒫ 14முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். 15அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். 16கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.⒫ 17நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன். 18அதுபோலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 27: 1, 4, 13-14

1⁽ஆண்டவரே என் ஒளி;␢ அவரே என் மீட்பு;␢ யாருக்கு நான் அஞ்சவேண்டும்?␢ ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;␢ யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?⁾ 4⁽நான் ஆண்டவரிடம்␢ ஒரு விண்ணப்பம் செய்தேன்;␢ அதையே நான் நாடித் தேடுவேன்;␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ என் வாழ்நாள் எல்லாம்␢ நான் குடியிருக்க வேண்டும்,␢ ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; § அவரது கோவிலில் அவரது␢ திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.⁾ 13⁽வாழ்வோரின் நாட்டினிலே␢ ஆண்டவரின் நலன்களைக்␢ காண்பேன் என்று␢ நான் இன்னும் நம்புகின்றேன்.⁾ 14⁽நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;␢ மன உறுதிகொள்;␢ உன் உள்ளம் வலிமை பெறட்டும்;␢ ஆண்டவருக்காகக் காத்திரு.⁾
Alleluia

1 பேதுரு 4: 14

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 14: 25-33

25பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: 26“என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 27தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.⒫ 28“உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? 29இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 30‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால், முடிக்க இயலவில்லை’ என்பார்களே!⒫ 31“வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? 32எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? 33அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.