வாசகங்கள்
13 டிசம்பர், 2028
Lucy, Virgin, Martyr Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 40: 25-31
25⁽‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?␢ எனக்கு நிகரானவர் யார்?’␢ என்கிறார் தூயவர்.⁾
26⁽உங்கள் கண்களை உயர்த்தி␢ மேலே பாருங்கள்;␢ அவற்றைப் படைத்தவர் யார்?␢ வான் படையை எண்ணிக்கை வாரியாய்␢ வெளிக்கொணர்ந்து␢ ஒவ்வொன்றையும்␢ பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ?␢ அவர் ஆற்றல்மிக்கவராயும்␢ வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால்␢ அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.⁾
27⁽“என் வழி ஆண்டவருக்கு␢ மறைவாய் உள்ளது;␢ என் நீதி என் கடவுளுக்குப்␢ புலப்படவில்லை” என்று␢ யாக்கோபே, நீ செல்வது ஏன்?␢ இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்?⁾
28⁽உனக்குத் தெரியாதா?␢ நீ கேட்டதில்லையா?␢ ஆண்டவரே என்றுமுள கடவுள்;␢ அவரே மண்ணுலகின்␢ எல்லைகளைப் படைத்தவர்;␢ அவர் சோர்ந்து போகார்;␢ களைப்படையார்;␢ அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.⁾
29⁽அவர் சோர்வுற்றவருக்கு␢ வலிமை அளிக்கின்றார்;␢ வலிமையிழந்தவரிடம்␢ ஊக்கம் பெருகச் செய்கின்றார்.⁾
30⁽இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்;␢ வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.⁾
31⁽ஆண்டவர்மேல்␢ நம்பிக்கை வைத்திருப்பவர்களோ␢ புதிய ஆற்றல் பெறுவர்.␢ கழுகுகள்போல் இறக்கை விரித்து␢ உயரே செல்வர்;␢ அவர்கள் ஓடுவர்; களைப்படையார்;␢ நடந்து செல்வர்; சோர்வடையார்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 103: 1-2, 3-4, 8 and 10
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் முழு உளமே!␢ அவரது திருப்பெயரை ஏத்திடு!⁾
2⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ அவருடைய கனிவான செயல்கள்␢ அனைத்தையும் மறவாதே!⁾
3⁽அவர் உன் குற்றங்களையெல்லாம்␢ மன்னிக்கின்றார்;␢ உன் நோய்களையெல்லாம்␢ குணமாக்குகின்றார்.⁾
4⁽அவர் உன் உயிரைப்␢ படுகுழியினின்று மீட்கின்றார்;␢ அவர் உனக்குப்␢ பேரன்பையும் இரக்கத்தையும்␢ மணிமுடியாகச் சூட்டுகின்றார்.⁾
8⁽ஆண்டவர் இரக்கமும் அருளும்␢ கொண்டவர்;␢ நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.⁾
10⁽அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப␢ நம்மை நடத்துவதில்லை;␢ நம் குற்றங்களுக்கு ஏற்ப␢ நம்மைத் தண்டிப்பதில்லை.⁾
Gospel
மத்தேயு 11: 28-30
28மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்