டிசம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

26 டிசம்பர், 2028

Stephen, Protomartyr Feast

அன்றைய திருப்பலி
First Reading

திருத்தூதர் பணிகள் 6: 8-10; 7: 54-59

8ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். 9அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவனோடு வாதாடத் தொடங்கினர். 10ஆனால், அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. 54இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். 55அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, 56“இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார். 57ஆனால், அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டு பெருங் கூச்சலிட்டு ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். 58நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். 59அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 31: 3cd-4, 6 and 8ab, 16bc and 17

3⁽ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;␢ உமது பெயரின் பொருட்டு␢ எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.⁾ 4⁽அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள␢ வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்;␢ ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.⁾ 6⁽நானோ, பயனற்ற சிலைகளில்␢ பற்றுடையோரை வெறுத்து,␢ ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.⁾ 8⁽என் எதிரியின் கையில்␢ என்னை நீர் விட்டுவிடவில்லை;␢ அகன்ற இடத்தில் என்னைக்␢ காலூன்றி நிற்கவைத்தீர்.⁾ 16⁽உமது முகத்தின் ஒளி␢ அடியேன் மீது வீசும்படி செய்யும்;␢ உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.⁾ 17⁽ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்;␢ என்னை வெட்கமுற விடாதேயும்;␢ பொல்லார் வெட்கிப்போவார்களாக!␢ பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!⁾
Alleluia

திருப்பாடல்கள் 118: 26a, 27a

26⁽ஆண்டவரின் பெயரால் வருபவர்␢ ஆசி பெற்றவர்!␢ ஆண்டவரது இல்லத்தினின்று␢ உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.⁾ 27⁽ஆண்டவரே இறைவன்;␢ அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்;␢ கிளைகளைக் கையிலேந்தி␢ விழாவினைத் தொடங்குங்கள்;␢ பீடத்தின் கொம்புகள்வரை␢ பவனியாகச் செல்லுங்கள்.⁾
Gospel

மத்தேயு 10: 17-22

17எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். 18என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். 19இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். 21சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். 22என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.