டிசம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

21 டிசம்பர், 2028

Advent Weekday (O Oriens)/ Peter Canisius, Priest, Doctor

Peter Canisius, Priest, Doctor
First Reading

Songs 2: 8-14 or Zephaniah 3: 14-18a

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 33: 2-3, 11-12, 20-21

2⁽யாழிசைத்து ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ பதின் நரம்பு யாழினால்␢ அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;⁾ 3⁽புத்தம்புது பாடல் ஒன்றை␢ அவருக்குப் பாடுங்கள்;␢ திறம்பட இசைத்து␢ மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.⁾ 11⁽ஆண்டவரின் எண்ணங்களோ␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவரது உள்ளத்தின் திட்டங்கள்␢ தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.⁾ 12⁽ஆண்டவரைத் தன் கடவுளாகக்␢ கொண்ட இனம் பேறுபெற்றது;␢ அவர் தமது உரிமைச் சொத்தாகத்␢ தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.⁾ 20⁽நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;␢ அவரே நமக்குத் துணையும் § கேடயமும் ஆவார்.⁾ 21⁽நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;␢ ஏனெனில், அவரது திருப்பெயரில்␢ நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.⁾
Gospel

லூக்கா 1: 39-45

39அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 40அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். 41மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 42அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 43என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 44உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. 45ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.