வாசகங்கள்
16 டிசம்பர், 2028
Advent Weekday
அன்றைய திருப்பலி
First Reading
சீராக் 48: 1-4, 9-11
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 80: 2ac and 3b, 15-16, 18-19
2⁽எப்ராயிம், பென்யமின்,␢ மனாசேயின் முன்னிலையில்␢ உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து␢ எம்மை மீட்க வாரும்!⁾
3⁽கடவுளே, எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾
15⁽உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,␢ உமக்கென நீர் வளர்த்த மகவைக்␢ காத்தருளும்!⁾
16⁽அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;␢ அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;␢ உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,␢ அவர்கள் அழிந்துபோவார்களாக!⁾
18⁽இனி நாங்கள் உம்மைவிட்டு␢ அகலமாட்டோம்;␢ எமக்கு வாழ்வு அளித்தருளும்;␢ நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.⁾
19⁽படைகளின் கடவுளான ஆண்டவரே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ நாங்கள் விடுதலை பெறுமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾
Alleluia
லூக்கா 3: 4, 6
4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ⁽“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: § ‘ஆண்டவருக்காக வழியை␢ ஆயத்தமாக்குங்கள்;␢ அவருக்காக பாதையைச்␢ செம்மையாக்குங்கள்;⁾
6⁽மனிதர் அனைவரும் கடவுள் அருளும்␢ மீட்பைக் காண்பர்’.”⁾⒫
Gospel
மத்தேயு 17: 9a, 10-13
9அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10அப்பொழுது சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள்.
11அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.
12ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே, மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார்.
13திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.