வாசகங்கள்
4 டிசம்பர், 2028
Advent Weekday / John of Damascus, Priest, Religious, Doctor
John of Damascus, Priest, Religious, Doctor
First Reading
எசாயா 4: 2-6
2⁽அந்நாளில் ஆண்டவரால்␢ துளிர்க்கும் தளிர்,␢ அழகும் மேன்மையும்␢ வாய்ந்ததாய் இருக்கும்;␢ நாட்டில் விளையும் நற்கனிவகைகள்,␢ இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின்␢ பெருமையும் மேன்மையுமாய் அமையும்.⁾
3⁽அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும்,␢ எருசலேமில் தப்பி வாழ்வோரும்␢ ‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்;␢ உயிர் பிழைப்பதற்கென்று␢ எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும்␢ ‛புனிதர்’ எனப்படுவர்.⁾
4⁽என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக்␢ கழுவித் தூய்மைப்படுத்துவார்;␢ நீதியின்படி தீர்ப்பிடும்␢ அவரது தன்மையாலும்␢ நெருப்புத்தணலையொத்த␢ அவரது ஆற்றலாலும்␢ எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி␢ அதனைத் தூய்மைப்படுத்துவார்.⁾
5சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும்.
6அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 122: 1-2, 3-4b, 4cd-5, 6-7, 8-9
1⁽“ஆண்டவரது இல்லத்திற்குப்␢ போவோம்”, என்ற அழைப்பை␢ நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.⁾
2⁽எருசலேமே! இதோ,␢ நாங்கள் அடியெடுத்து வைத்து␢ உன் வாயில்களில் நிற்கின்றோம்.⁾
3⁽எருசலேம் செம்மையாக␢ ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.⁾
4⁽ஆண்டவரின் திருக்குலத்தார்␢ அங்கே செல்கின்றனர்;␢ இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட␢ கட்டளைக்களுக்கிணங்க␢ ஆண்டவரது பெயருக்கு அவர்கள்␢ நன்றி செலுத்தச் செல்வார்கள்.⁾
5⁽அங்கே நீதி வழங்க␢ அரியணைகள் இருக்கின்றன.␢ அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.⁾
6⁽எருசலேமில்␢ சமாதானம் நிலைத்திருக்கும்படி␢ வேண்டிக்கொள்ளுங்கள்;␢ “உன்னை விரும்புவோர்␢ வளமுடன் வாழ்வார்களாக!⁾
7⁽உன் கோட்டைகளுக்குள்␢ அமைதி நிலவுவதாக!␢ உம் மாளிகைகளில்␢ நல்வாழ்வு இருப்பதாக!⁾
8⁽உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று␢ நான் என் சகோதரர் சார்பிலும்␢ என் நண்பர் சார்பிலும்␢ உன்னை வாழ்த்துகின்றேன்.⁾
9⁽நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம்␢ இங்கே இருப்பதால், உன்னில்␢ நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.⁾
Alleluia
திருப்பாடல்கள் 80: 4
4⁽படைகளின் கடவுளாம் ஆண்டவரே!␢ உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக␢ எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?⁾
Gospel
மத்தேயு 8: 5-11
5இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.
6“ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார்.
7இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.
8நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
9நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.
10இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.
11கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.