மார்ச் 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

14 மார்ச், 2026

Saturday of the Third Week of Lent

அன்றைய திருப்பலி
Reading I

ஒசேயா 6:1-6

1⁽“வாருங்கள், ஆண்டவரிடம் நாம்␢ திரும்புவோம்; நம்மைக்␢ காயப்படுத்தியவர் அவரே,␢ அவரே நம்மைக் குணமாக்குவார்;␢ நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே,␢ அவரே நம் காயங்களைக் கட்டுவார்.⁾ 2⁽இரண்டு நாளுக்குப் பிறகு␢ நமக்குப் புத்துயிர் அளிப்பார்;␢ மூன்றாம் நாளில்␢ நம்மை எழுப்பி விடுவார்;␢ அப்பொழுது நாம்␢ அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.⁾ 3⁽நாம் அறிவடைவோமாக,␢ ஆண்டவரைப்பற்றி␢ அறிய முனைந்திடுவோமாக;␢ அவருடைய புறப்பாடு␢ புலரும் பொழுதுபோல் திண்ணமானது;␢ மழைபோலவும், நிலத்தை நனைக்கும்␢ இளவேனிற்கால மாரிபோலவும்␢ அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.⁾ 4⁽எப்ராயிமே! உன்னை நான்␢ என்ன செய்வேன்?␢ யூதாவே! உன்னை நான்␢ என்ன செய்வேன்?␢ உங்கள் அன்பு␢ காலைநேர மேகம் போலவும்␢ கதிரவனைக் கண்ட பனிபோலவும்␢ மறைந்துபோகிறதே!⁾ 5⁽அதனால்தான் நான்␢ இறைவாக்கினர் வழியாக␢ அவர்களை வெட்டி வீழ்த்தினேன்;␢ என் வாய்மொழிகளில்␢ அவர்களைக் கொன்று விட்டேன்;␢ எனது தண்டனைத் தீர்ப்பு␢ ஒளிபோல வெளிப்படுகின்றது.⁾ 6⁽உண்மையாகவே␢ நான் விரும்புவது பலியை அல்ல,␢ இரக்கத்தையே விரும்புகின்றேன்;␢ எரிபலிகளைவிட,␢ கடவுளை அறியும் அறிவையே␢ நான் விரும்புகின்றேன்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 51:3-4, 18-19, 20-21

3⁽ஏனெனில், என் குற்றங்களை␢ நான் உணர்கின்றேன்;␢ என் பாவம் எப்போதும்␢ என் மனக்கண்முன் நிற்கின்றது.⁾ 4⁽உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;␢ உம் பார்வையில் தீயது செய்தேன்;␢ எனவே, உம் தீர்ப்பினால்␢ உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;␢ உம் தண்டனைத் தீர்ப்பில்␢ நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.⁾ 18⁽சீயோனுக்கு இன்முகம் காட்டி␢ நன்மை செய்யும்;␢ எருசலேமின் மதில்களை␢ மீண்டும் கட்டுவீராக!⁾ 19⁽அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்␢ முறையான பலிகளை விரும்புவீர்;␢ மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்␢ பலியாகச் செலுத்தப்படும்.⁾
Verse Before the Gospel

திருப்பாடல்கள் 95:8

8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
Gospel

லூக்கா 18:9-14

9தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: 10“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். 11பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; 12வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’ 13ஆனால், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.” 14இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.