வாசகங்கள்
21 மார்ச், 2026
Saturday of the Fourth Week of Lent
அன்றைய திருப்பலி
Reading I
எரேமியா 11:18-20
18⁽“ஆண்டவர் எனக்கு␢ வெளிப்படுத்தினார்;␢ நானும் புரிந்து கொண்டேன்.␢ பின்னர் நீர் அவர்களின்␢ செயல்களை எனக்குக் காட்டினீர்.⁾
19⁽வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும்␢ சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்;␢ அவர்கள் எனக்கு எதிராய்,␢ “மரத்தைப் பழத்தோடு அழிப்போம்;␢ வாழ்வோரின் நாட்டிலிருந்து␢ அவனை அகற்றிவிடுவோம்;␢ அவன் பெயர் மறக்கப்படட்டும்”␢ என்று சொல்லிச் சதித் திட்டம்␢ தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.⁾
20⁽படைகளின் ஆண்டவரே,␢ நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்;␢ உள்ளுணர்வுகளையும்␢ இதயச் சிந்தனைகளையும்␢ சோதித்தறிபவர்;␢ நீர் அவர்களைப் பழிவாங்குவதை␢ நான் காணவேண்டும்.␢ ஏனெனில், என் வழக்கை␢ உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.⁾⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 7:2-3, 9-10, 11-12
2⁽இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல § என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;␢ விடுவிப்போர் எவரும் இரார்.⁾
3⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ நான் இவற்றைச் செய்திருந்தால் –␢ என் கை தவறிழைத்திருந்தால்,⁾
9⁽பொல்லாரின் தீமையை␢ முடிவுக்குக் கொண்டுவாரும்;␢ நல்லாரை நிலைநிறுத்தும்;␢ நீர் எண்ணங்களையும்␢ விருப்பங்களையும் கண்டறிபவர்;␢ நீதி அருளும் கடவுள்.⁾
10⁽கடவுளே என் கேடயம்;␢ நேரிய உளத்தோரை␢ அவர் விடுவிப்பார்.⁾
11⁽கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;␢ நாள்தோறும் அநீதியைப்␢ பொறுத்துக் கொள்ளாத இறைவன்.⁾
12⁽பொல்லார் மனமாற்றம் அடையாவிடில்,␢ அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்;␢ வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.⁾
Verse Before the Gospel
லூக்கா 8:15
15நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.
Gospel
யோவான் 7:40-53
40கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர்.
41வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
42தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர்.
43இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
44சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால், யாரும் அவரைத் தொடவில்லை.
45தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள்.
46காவலர் மறுமொழியாக, “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர்.
47பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ?
48தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?
49இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர்.
50அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம்,
51“ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார்.
52அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள்.⒫
53*[அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.]