மார்ச் 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

19 மார்ச், 2026

Solemnity of Saint Joseph, Spouse of the Blessed Virgin Mary

அன்றைய திருப்பலி
Reading I

2 சாமுவேல் 7:4-5, 12-14, 16

4அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: 5“நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: ‘நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? 12உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். 13எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். 14நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். 16என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!’⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 89:2-3, 4-5, 27 and 29

2⁽உமது பேரன்பு␢ என்றென்றும் நிலைத்துள்ளது என்று␢ அறிவிப்பேன்;␢ உமது உண்மை வானைப்போல்␢ உறுதியானது.⁾ 3⁽நீர் உரைத்தது:␢ ‛நான் தேர்ந்துகொண்டவனோடு␢ உடன்படிக்கை செய்துகொண்டேன்;␢ என் ஊழியன் தாவீதுக்கு␢ ஆணையிட்டு நான் கூறியது:⁾ 4⁽உன் வழிமரபை␢ என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;␢ உன் அரியணையைத்␢ தலைமுறை தலைமுறையாக␢ நிலைத்திருக்கச் செய்வேன்’ (சேலா)⁾ 5⁽ஆண்டவரே, வானங்கள்␢ உம் வியத்தகு செயல்களைப் § புகழ்கின்றன;␢ தூயவர் குழுவினில்␢ உமது உண்மை விளங்கும்.⁾ 27⁽நான் அவனை␢ என் தலைப்பேறு ஆக்குவேன்;␢ மண்ணகத்தின் மாபெரும்␢ மன்னன் ஆக்குவேன்.⁾ 29⁽அவனது வழிமரபை␢ என்றென்றும் நிலைநிறுத்துவேன்;␢ அவனது அரியணையை␢ வான்வெளி உள்ளவரை␢ நிலைக்கச் செய்வேன்.⁾
Reading II

உரோமையர் 4:13, 16-18, 22

13உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. 16ஆகவே, கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு, வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் — திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் — உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. 17ஏனெனில் “எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். 18“உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே, அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். 22ஆகவே, “அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.”⒫
Verse Before the Gospel

திருப்பாடல்கள் 84:5

5⁽உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர்␢ பேறு பெற்றோர்;␢ அவர்களது உள்ளம் § சீயோனுக்குச் செல்லும்␢ நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.⁾
Gospel

மத்தேயு 1:16, 18-21, 24

16⁽யாக்கோபின் மகன்␢ மரியாவின் கணவர் யோசேப்பு.␢ மரியாவிடம் பிறந்தவரே␢ கிறிஸ்து* என்னும் இயேசு.⁾ 18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார். 24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
Gospel - Alternative

லூக்கா 2:41-51

41ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; 42இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். 43விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; 44பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; 45அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். 46மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். 47அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். 48அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். 49அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். 50அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 51பின்பு, அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.