மார்ச் 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

24 மார்ச், 2026

Tuesday of the Fifth Week of Lent

அன்றைய திருப்பலி
Reading I

எண்ணிக்கை 21:4-9

4ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் “செங்கடல் சாலை” வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். 5மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர். 6உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை* மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். 7அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்” நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர். அவ்வாறே, மோசே மக்களுக்காக மன்றாடினார். 8அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். 9அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 102:2-3, 16-18, 19-21

2⁽நான் இடுக்கண் உற்ற நாளிலே␢ உமது முகத்தை மறைக்காதீர்!␢ உமது செவியை␢ என் பக்கமாகத் திருப்பியருளும்!␢ நான் மன்றாடும் நாளில்␢ விரைவாய் எனக்குப் பதிலளியும்!⁾ 3⁽என் வாழ்நாள்கள்␢ புகையென மறைகின்றன;␢ என் எலும்புகள்␢ தீச்சூழையென எரிகின்றன.⁾ 16⁽ஏனெனில் ஆண்டவர்␢ சீயோனைக் கட்டியெழுப்புவார்;␢ அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.⁾ 17⁽திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு␢ அவர் செவிகொடுப்பார்;␢ அவர்களின் மன்றாட்டை அவமதியார்.⁾ 18⁽இனி வரவிருக்கும் தலைமுறைக்கென␢ இது எழுதி வைக்கப்படட்டும்;␢ படைக்கப்படவிருக்கும் மக்கள்␢ ஆண்டவரைப் புகழட்டும்.⁾ 19⁽ஆண்டவர் தம் மேலுலகத்␢ திருத்தலத்தினின்று␢ கீழே நோக்கினார்;␢ அவர் விண்ணுலகினின்று␢ வையகத்தைக் கண்ணோக்கினார்.⁾ 20⁽அவர் சிறைப்பட்டோரின்␢ புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;␢ சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை␢ விடுவிப்பார்.⁾ 21⁽சீயோனில் ஆண்டவரின் பெயர்␢ போற்றப்படும்.␢ எருசலேமில் அவர்தம் புகழ்␢ அறிவிக்கப்படும்.⁾
Verse Before the Gospel

:-

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

யோவான் 8:21-30

21இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்” என்றார். 22யூதர்கள், “‘நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது’ என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?” என்று பேசிக்கொண்டார்கள்.⒫ 23இயேசு அவர்களிடம், “நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால், நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. 24ஆகவேதான், நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ‘இருக்கிறவர் நானே’ என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்” என்றார். 25அவர்கள், “நீர் யார்?” என்று அவரிடம் கேட்டார்கள். அவர், “நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன்.* 26உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால், என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்” என்றார். 27தந்தையைப்பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. 28இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, ‘இருக்கிறவர் நானே’; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். 29என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்” என்றார். 30அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.