வாசகங்கள்
16 நவம்பர், 2026
Monday of the Thirty-third Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
திருவெளிப்பாடு 1:1-4; 2:1-5
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 1:1-2, 3, 4, 6
1⁽நற்பேறு பெற்றவர் யார்? – அவர்␢ பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;␢ பாவிகளின் தீயவழி நில்லாதவர்;␢ இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;⁾
2⁽ஆனால், அவர் ஆண்டவரின்␢ திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;␢ அவரது சட்டத்தைப்பற்றி␢ இரவும் பகலும் சிந்திப்பவர்;⁾
3⁽அவர் நீரோடையோரம் நடப்பட்ட␢ மரம் போல் இருப்பார்;␢ பருவகாலத்தில் கனிதந்து,␢ என்றும் பசுமையாய் இருக்கும்␢ அம்மரத்திற்கு ஒப்பாவார்;␢ தாம் செய்வதனைத்திலும்␢ வெற்றி பெறுவார்.⁾
4⁽ஆனால், பொல்லார் அப்படி இல்லை;␢ அவர்கள் காற்று அடித்துச் செல்லும்␢ பதரைப்போல் ஆவர்.⁾
6⁽நேர்மையாளரின் நெறியை␢ ஆண்டவர் கருத்தில் கொள்வார்;␢ பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.⁾
Alleluia
யோவான் 8:12
12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel
லூக்கா 18:35-43
35இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.
36மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார்.
37நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
38உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார்.
39முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
40இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும்,
41“நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.
42இயேசு அவரிடம், “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார்.
43அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.