வாசகங்கள்
26 நவம்பர், 2026
Thursday of the Thirty-fourth Week in Ordinary Time (Ordinary)
Ordinary
Reading I
திருவெளிப்பாடு 18:1-2, 21-23; 19:1-3, 9
1இதன்பின் வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது.
2அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு கத்தினார்:⁽ “வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்!␢ அவள் பேய்களின் உறைவிடமாக,␢ அனைத்துத் தீய ஆவிகளின்␢ பதுங்கிடமாக,␢ தூய்மையற்ற பறவைகள்␢ அனைத்தின் புகலிடமாக,␢ தூய்மையற்ற வெறுக்கத்தக்க␢ விலங்குகளின் இருப்பிடமாக␢ மாறிவிட்டாள்.⁾
21பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்:⁽ “பாபிலோன் மாநகரே,␢ நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்;␢ நீ இருந்த இடம் தெரியாமல்␢ அழிந்து விடுவாய்.⁾
22⁽யாழை மீட்டுவோர், பாடகர்,␢ குழல் ஊதுவோர்,␢ எக்காளம் முழக்குவோர்␢ ஆகியோர் எழுப்பும் இசை␢ இனி உன் நடுவே எழவே எழாது;␢ தொழில் செய்யும் கைவினைஞர்␢ அனைவரும் இனி உன் நடுவே␢ குடியிருக்கவே மாட்டார்கள்;␢ எந்திரக்கல் எழுப்பும் ஒலி␢ இனி உன் நடுவே எழவே எழாது.⁾
23⁽விளக்கின் ஒளி இனி உன்னகத்தே␢ ஒளிரவே ஒளிராது;␢ மணமக்களின் மங்கல ஒலி␢ இனி உன்னகத்தே எழவே எழாது;␢ ஏனெனில், உன் வணிகர்கள்␢ மண்ணுலகில் பெருங்குடி மக்களாய்␢ விளங்கினார்கள்;␢ உன் பில்லிசூனியம்␢ எல்லா நாடுகளையும் ஏமாற்றிவிட்டது.⁾
1இதன்பின், பெருந்திரளான மக்களின் கூச்சல்போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது:⁽ “அல்லேலூயா!*␢ மீட்பும் மாட்சியும் வல்லமையும்␢ நம் கடவுளுக்கே உரியன.⁾
2⁽ஏனெனில் அவருடைய தீர்ப்புகள்␢ உண்மை உள்ளவை, நீதியானவை.␢ தன் பரத்தைமையால் மண்ணுலகை␢ அழிவுக்குட்படுத்திய பேர்போன␢ அந்த விலைமகளுக்கு␢ அவர் தீர்ப்பு வழங்கினார்;␢ தம் பணியாளர்களைக் கொன்றதற்காக␢ அவளைப் பழிவாங்கினார்.”⁾
3⁽மீண்டும் அந்த மக்கள்,␢ “அல்லேலூயா!␢ அந்த நகர் நடுவிலிருந்து␢ புகை என்றென்றும்␢ மேலே எழுந்த வண்ணம் உள்ளது”⁾ என்றார்கள்.
9அந்த வானதூதர் என்னிடம், “‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 100:1-2, 3, 4, 5
1⁽அனைத்துலகோரே!␢ ஆண்டவரை ஆர்ப்பரித்து␢ வாழ்த்துங்கள்!⁾
2⁽ஆண்டவரை␢ மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!␢ மகிழ்ச்சிநிறை பாடலுடன்␢ அவர் திருமுன் வாருங்கள்!⁾
3⁽ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!␢ அவரே நம்மைப் படைத்தவர்!␢ நாம் அவர் மக்கள்,␢ அவர் மேய்க்கும் ஆடுகள்!⁾
4⁽நன்றியோடு அவர்தம்␢ திருவாயில்களில் நுழையுங்கள்!␢ புகழ்ப்பாடலோடு அவர்தம்␢ முற்றத்திற்கு வாருங்கள்!␢ அவருக்கு நன்றி செலுத்தி,␢ அவர் பெயரைப் போற்றுங்கள்!⁾
5⁽ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;␢ என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;␢ தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.⁾
Alleluia
லூக்கா 21:28
28இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
Gospel
லூக்கா 21:20-28
20“எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்.
21அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம்.
22ஏனெனில், அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.
23அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில், மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள் மீது கடவுளின் சினமும் வரும்.
24அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும் வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.
25“மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.
26உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.
27அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.
28இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
Thanksgiving Day
Reading I
சீராக் 50:22-24
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 145:2-3, 4-5, 6-7, 8-9, 10-11
2⁽நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் புகழ்வேன்.⁾
3⁽ஆண்டவர் மாண்புமிக்கவர்;␢ பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்;␢ அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.⁾
4⁽ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு␢ உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;␢ வல்லமைமிகு உம் செயல்களை␢ எடுத்துரைக்கும்.⁾
5⁽உமது மாண்பின்␢ மேன்மையையும் மாட்சியையும்␢ வியத்தகு உம் செயல்களையும்␢ நான் சிந்திப்பேன்.⁾
6⁽அச்சந்தரும் உம் செயல்களின்␢ வல்லமையைப்பற்றி␢ மக்கள் பேசுவார்கள்;␢ உமது மாண்பினை நான்␢ விரித்துரைப்பேன்,⁾
7⁽அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை␢ நினைந்துக் கொண்டாடுவார்கள்;␢ உமது நீதியை எண்ணி␢ ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.⁾
8⁽ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;␢ எளிதில் சினம் கொள்ளாதவர்;␢ பேரன்பு கொண்டவர்.⁾
9⁽ஆண்டவர் எல்லாருக்கும்␢ நன்மை செய்பவர்;␢ தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்␢ இரக்கம் காட்டுபவர்.⁾
10⁽ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்␢ உமக்கு நன்றி செலுத்தும்;␢ உம்முடைய அன்பர்கள்␢ உம்மைப் போற்றுவார்கள்.⁾
11⁽அவர்கள் உமது அரசின் மாட்சியை␢ அறிவிப்பார்கள்;␢ உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.⁾
Reading II
1 கொரிந்தியர் 1:3-9
3Same as above
4கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன்.
5ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.
6மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.
8நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.
9கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.
Alleluia
1 தெசலோனிக்கர் 5:18
18எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே⒫.
Gospel
லூக்கா 17:11-19
11இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
12ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,
13“ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
14அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.
15அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;
16அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
17இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
18கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
19பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.