நவம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930
இன்றுக்கு

வாசகங்கள்

13 நவம்பர், 2026

Memorial of Saint Frances Xavier Cabrini, Virgin[In the Dioceses of the United States]

அன்றைய திருப்பலி
Reading I

2 யோவான் 4-9

4தந்தையிடமிருந்து நாம் பெற்ற கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன். 5பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை. 6நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது; அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்; அதைக் கடைப்பிடித்து வாழுங்கள். 7ஏனெனில், ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். 8உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள்.⒫ 9கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர் கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 119:1, 2, 10, 11, 17, 18

1⁽மாசற்ற வழியில் நடப்போர்␢ பேறுபெற்றோர்;␢ ஆண்டவர் திருச்சட்டப்படி␢ நடப்போர் பேறுபெற்றோர்.⁾ 2⁽அவர் தந்த ஒழுங்குமுறைகளைக்␢ கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்;␢ முழுமனத்தோடு அவரைத் தேடுவோர்␢ பேறுபெற்றோர்.⁾ 10⁽முழுமனத்தோடு␢ நான் உம்மைத் தேடுகின்றேன்;␢ உம் கட்டளைகளைவிட்டு␢ என்னை விலகவிடாதேயும்.⁾ 11⁽உமக்கெதிராய்␢ நான் பாவம் செய்யாதவாறு␢ உமது வாக்கை␢ என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.⁾ 17⁽உம் அடியானுக்கு நன்மை செய்யும்;␢ அப்பொழுது, நான் உம் சொற்களைக்␢ கடைப்பிடித்து வாழ்வேன்.⁾ 18⁽உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை␢ நான் கண்டுணருமாறு␢ என் கண்களைத் திறந்தருளும்.⁾
Alleluia

லூக்கா 21:28

28இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
Gospel

லூக்கா 17:26-37

26நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். 27நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. 28அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள். 29லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. 30மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.⒫ 31“அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். 32லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். 33தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்.⒫ 34நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். 35இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். 36[இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.]* 37அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இது எங்கே நிகழும்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.