நவம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930
இன்றுக்கு

வாசகங்கள்

24 நவம்பர், 2026

Memorial of Saint Andrew Dung-Lac, Priest, and Companions, Martyrs

அன்றைய திருப்பலி
Reading I

திருவெளிப்பாடு 14:14-19

14பின்பு, ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப்போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன. 15மற்றொரு வானதூதர் கோவிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார். 16உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார். 17மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது.⒫ 18நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில், திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார். 19ஆகவே, அந்த வானதூதர் மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக்குழியில் அவற்றைப் போட்டார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 96:10, 11-12, 13

10⁽வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;␢ ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகு உறுதியாக␢ நிலைநிறுத்தப்பட்டுள்ளது;␢ அது அசைவுறாது;␢ அவர் மக்களினங்களை␢ நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.⁾ 11⁽விண்ணுலகம் மகிழ்வதாக;␢ மண்ணுலகம் களிகூர்வதாக;␢ கடலும் அதில் நிறைந்துள்ளனவும்␢ முழங்கட்டும்.⁾ 12⁽வயல்வெளியும் அதில் உள்ள␢ அனைத்தும் களிகூரட்டும்;␢ அப்பொழுது, காட்டில் உள்ள␢ அனைத்து மரங்களும்␢ அவர் திருமுன் களிப்புடன் பாடும்.⁾ 13⁽ஏனெனில் அவர் வருகின்றார்;␢ மண்ணுலகிற்கு␢ நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;␢ நிலவுலகை நீதியுடனும்␢ மக்களினங்களை உண்மையுடனும்␢ அவர் தீர்ப்பிடுவார்.⁾
Alleluia

திருவெளிப்பாடு 2:10

10உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப்பற்றி அஞ்சாதே. இதோ! சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோருள் சிலரைச் சிறையில் தள்ளவிருக்கின்றது. பத்து நாள் நீ வேதனையுறுவாய். இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்.
Gospel

லூக்கா 21:5-11

5கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். 6இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார். 7அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள். 8அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். 9ஆனால், போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில், இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால், உடனே முடிவு வராது” என்றார். 10மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். 11பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.