நவம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930
இன்றுக்கு

வாசகங்கள்

28 நவம்பர், 2026

Saturday of the Thirty-fourth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

திருவெளிப்பாடு 22:1-7

1பின்பு, அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, 2நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தது.* மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனி தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. 3சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; 4அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். 5இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள். 6பின்னர், அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார்.⒫ 7இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 95:1-2, 3-5, 6-7

1⁽வாருங்கள்; ஆண்டவரைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ நமது மீட்பின் பாறையைப்␢ போற்றி ஆர்ப்பரியுங்கள்.⁾ 2⁽நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;␢ புகழ்ப் பாக்களால் அவரைப்␢ போற்றி ஆர்ப்பரிப்போம்.⁾ 3⁽ஏனெனில், ஆண்டவர்␢ மாண்புமிகு இறைவன்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும்␢ மேலான பேரரசர்.⁾ 4⁽பூவுலகின் ஆழ்பகுதிகள்␢ அவர்தம் கையில் உள்ளன;␢ மலைகளின் கொடுமுடிகளும்␢ அவருக்கே உரியன.⁾ 5⁽கடலும் அவருடையதே;␢ அவரே அதைப் படைத்தார்;␢ உலர்ந்த தரையையும்␢ அவருடைய கைகளே உருவாக்கின.⁾ 6⁽வாருங்கள்; தாள்பணிந்து␢ அவரைத் தொழுவோம்;␢ நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்␢ முழந்தாளிடுவோம்.⁾ 7⁽அவரே நம் கடவுள்;␢ நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;␢ நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.␢ இன்று நீங்கள் அவரது குரலுக்குச்␢ செவிகொடுத்தால் எத்துணை நலம்!⁾
Alleluia

லூக்கா 21:36

36ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
Gospel

லூக்கா 21:34-36

34❮34-35❯மேலும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். 35Same as above 36ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.