நவம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930
இன்றுக்கு

வாசகங்கள்

25 நவம்பர், 2026

Wednesday of the Thirty-fourth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

திருவெளிப்பாடு 15:1-4

1பின்பு, பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்; ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும். 2நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின்மீது அதன் சிலைமீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள்மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக்கடல் அருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன். 3அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: ⁽“கடவுளாகிய ஆண்டவரே,␢ எல்லாம் வல்லவரே,␢ உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன.␢ மக்களினங்களின் மன்னரே,␢ உம் வழிகள் நேரியவை,␢ உண்மையுள்ளவை.⁾ 4⁽ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்?␢ உமது பெயரைப்␢ போற்றிப் புகழாதவர் யார்?␢ நீர் ஒருவரே தூயவர்,␢ எல்லா மக்களினங்களும்␢ உம் திருமுன் வந்து வணங்கும்.␢ ஏனெனில் உம் நீதிச் செயல்கள்␢ வெளிப்படையாயின.”⁾⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 98:1, 2-3, 7-8, 9

1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் வியத்தகு␢ செயல்கள் புரிந்துள்ளார்.␢ அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்␢ அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.⁾ 2⁽ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;␢ பிற இனத்தார் கண்முன்னே␢ தம் நீதியை வெளிப்படுத்தினார்.⁾ 3⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ வாக்களிக்கப்பட்ட␢ தமது பேரன்பையும் உறுதிமொழியையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.␢ உலகெங்குமுள அனைவரும்␢ நம் கடவுள் அருளிய␢ விடுதலையைக் கண்டனர்.⁾ 7⁽கடலும் அதில் நிறைந்தவையும்␢ உலகும் அதில் உறைபவையும்␢ முழங்கிடுக!⁾ 8⁽ஆறுகளே! கைகொட்டுங்கள்;␢ மலைகளே! ஒன்றுகூடுங்கள்;⁾ 9⁽ஆண்டவர் முன்னிலையில்␢ மகிழ்ந்து பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;␢ பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;␢ மக்களினங்களை நேர்மையுடன்␢ ஆட்சி செய்வார்.⁾
Alleluia

திருவெளிப்பாடு 2:10

10உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப்பற்றி அஞ்சாதே. இதோ! சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோருள் சிலரைச் சிறையில் தள்ளவிருக்கின்றது. பத்து நாள் நீ வேதனையுறுவாய். இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்.
Gospel

லூக்கா 21:12-19

12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். 13எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். 14அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 15ஏனெனில், நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. 16ஆனால், உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். 17என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். 18இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. 19நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.