வாசகங்கள்
21 நவம்பர், 2026
Memorial of the Presentation of the Blessed Virgin Mary
அன்றைய திருப்பலி
Responsorial Psalm
திருப்பாடல்கள் 144:1, 2, 9-10
1⁽என் பாறையாகிய ஆண்டவர்␢ போற்றி! போற்றி!␢ போரிட என் கைகளுக்குப்␢ பயிற்சி அளிப்பவர் அவரே!␢ போர்புரிய என் விரல்களைப்␢ பழக்குபவரும் அவரே!⁾
2⁽என் கற்பாறையும்* கோட்டையும் அவரே!␢ எனக்குப் பாதுகாப்பாளரும்␢ மீட்பரும் அவரே!␢ என் கேடயமும் புகலிடமும் அவரே!␢ மக்களினத்தாரை எனக்குக்␢ கீழ்ப்படுத்துபவர் அவரே!⁾
9⁽இறைவா, நான் உமக்குப்␢ புதியதொரு பாடல் பாடுவேன்;␢ பதின் நரம்பு வீணையால்␢ உமக்குப் புகழ் பாடுவேன்.⁾
10⁽அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே!␢ உம் ஊழியர் தாவீதைக்␢ கொடிய வாளினின்று␢ தப்புவித்தவரும் நீரே!⁾
Alleluia
2 திமொத்தேயு 1:10
10நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.⒫
Gospel
லூக்கா 20:27-40
27உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,
28“போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.
29இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.
30இரண்டாம்,
31மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;
32கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
33அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.
34அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.
35ஆனால், வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.
36இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
37இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ⁽‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’⁾ என்று கூறியிருக்கிறார்.
38அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.
39மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர்.
40அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.