வாசகங்கள்
29 நவம்பர், 2026
First Sunday of Advent
அன்றைய திருப்பலி
Reading I
எசாயா 63:16-17, 19; 64:2-7
16⁽ஏனெனில், நீரே எங்கள் தந்தை;␢ ஆபிரகாம் எங்களை அறியார்;␢ இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்;␢ ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை;␢ பண்டை நாளிலிருந்து␢ ‘எம் மீட்பர்’ என்பதே உம் பெயராம்.⁾
17⁽ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து␢ எங்களைப் பிறழச் செய்வதேன்?␢ உமக்கு அஞ்சி நடவாதவாறு␢ எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்?␢ உம் ஊழியர்களை முன்னிட்டும்,␢ உம் உரிமைச் சொத்தாகிய,␢ குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும்.⁾
19⁽உம்மால் என்றுமே␢ ஆளப்படாதவர்கள் போலானோம்;␢ உம் பெயரால்␢ அழைக்கப்படாதவர்கள் போலானோம்.⁾
2⁽விறகின்மேல் தீ␢ கொழுந்துவிட்டு எரிவது போலும்,␢ தண்ணீரை நெருப்பு␢ கொதிக்கச் செய்வது போலும்,␢ அவற்றின் நிலைமை இருக்கும்.␢ இவற்றால் உம் பெயர்␢ உம் பகைவருக்குத் தெரியவரும்;␢ வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.⁾
3⁽நாங்கள் எதிர்பாராத␢ அச்சம் தரும் செயல்களை␢ நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்;␢ மலைகள் உம் முன்னே உருகி ஓடின!⁾
4⁽தம்மை நம்பியிருப்போருக்காகச்␢ செயலாற்றும் கடவுள்␢ உம்மையன்றி வேறு யார்?␢ முற்காலம் முதல் இதுபற்றி␢ எவரும் கேள்வியுற்றதில்லை;␢ செவியுற்றதுமில்லை,␢ கண்ணால் பார்த்ததுமில்லை.⁾
5⁽மகிழ்ச்சியுடன்␢ நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும்␢ உம்மையும் உம் வழிகளையும்␢ நினைவில் கொள்வோர்க்கும்␢ நீர் துணை செய்ய விரைகிறீர்;␢ இதோ, நீர் சினமடைந்தீர்;␢ நாங்கள் பாவம் செய்தோம்;␢ நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க,␢ நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?⁾
6⁽நாங்கள் அனைவரும்␢ தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்;␢ எங்கள் நேரிய செயல்கள் எல்லாம்␢ அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின;␢ நாங்கள் யாவரும் இலைபோல்␢ கருகிப் போகின்றோம்;␢ எங்கள் தீச்செயல்கள்␢ காற்றைப் போல்␢ எங்களை அடித்துச் சென்றன.⁾
7⁽உம் பெயரைப் போற்றுவார்␢ எவரும் இல்லை;␢ உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர்␢ எவரும் இல்லை;␢ நீர் உம் முகத்தை␢ எங்களுக்கு மறைத்துள்ளீர்;␢ எங்கள் தீச்செயல்களின் பிடியில்␢ எங்களை அழியவிட்டீர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 80:2-3, 15-16, 18-19
2⁽எப்ராயிம், பென்யமின்,␢ மனாசேயின் முன்னிலையில்␢ உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து␢ எம்மை மீட்க வாரும்!⁾
3⁽கடவுளே, எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾
15⁽உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,␢ உமக்கென நீர் வளர்த்த மகவைக்␢ காத்தருளும்!⁾
16⁽அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;␢ அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;␢ உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,␢ அவர்கள் அழிந்துபோவார்களாக!⁾
18⁽இனி நாங்கள் உம்மைவிட்டு␢ அகலமாட்டோம்;␢ எமக்கு வாழ்வு அளித்தருளும்;␢ நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.⁾
19⁽படைகளின் கடவுளான ஆண்டவரே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ நாங்கள் விடுதலை பெறுமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾
Reading II
1 கொரிந்தியர் 1:3-9
3Same as above
4கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன்.
5ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.
6மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.
8நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.
9கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.
Alleluia
திருப்பாடல்கள் 85:8
8⁽ஆண்டவராம் இறைவன்␢ உரைப்பதைக் கேட்பேன்;␢ தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு␢ நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;␢ அவர்களோ மடமைக்குத்␢ திரும்பிச் செல்லலாகாது.⁾
Gospel
மாற்கு 13:33-37
33கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.
34நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.
35அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில், வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.
36அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.
37நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.”