நவம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930
இன்றுக்கு

வாசகங்கள்

3 நவம்பர், 2026

Tuesday of the Thirty-first Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

பிலிப்பியர் 2:5-11

5கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!⒫ 6⁽கடவுள் வடிவில் விளங்கிய அவர்,␢ கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை␢ வலிந்து பற்றிக்கொண்டிருக்க␢ வேண்டியதொன்றாகக் கருதவில்லை.⁾ 7⁽ஆனால் தம்மையே வெறுமையாக்கி␢ அடிமையின் வடிவை ஏற்று␢ மனிதருக்கு ஒப்பானார்.␢ மனித உருவில் தோன்றி,⁾ 8⁽சாவை ஏற்கும் அளவுக்கு,␢ அதுவும் சிலுவைச் சாவையே␢ ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து␢ தம்மையே தாழ்த்திக்கொண்டார்.⁾ 9⁽எனவே கடவுளும் அவரை␢ மிகவே உயர்த்தி,␢ எப்பெயருக்கும் மேலான பெயரை␢ அவருக்கு அருளினார்.⁾ 10⁽ஆகவே இயேசுவின் பெயருக்கு␢ விண்ணவர், மண்ணவர், கீழுலகோர்␢ அனைவரும் மண்டியிடுவர்;⁾ 11⁽தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக␢ ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என␢ எல்லா நாவுமே அறிக்கையிடும்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 22:26-27, 28-30, 30, 31-32

26⁽எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;␢ ஆண்டவரை நாடுவோர்␢ அவரைப் புகழ்வராக!␢ அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!⁾ 27⁽பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர்␢ அனைவரும் இதை உணர்ந்து␢ ஆண்டவர் பக்கம் திரும்புவர்;␢ பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும்␢ அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.⁾ 28⁽ஏனெனில் அரசு ஆண்டவருடையது;␢ பிற இனத்தார்மீதும்␢ அவர் ஆட்சி புரிகின்றார்.⁾ 29⁽மண்ணின் செல்வர் யாவரும்␢ அவரைப் பணிவர்;*␢ புழுதிக்குள் இறங்குவோர் யாவரும்␢ தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்␢ அவரை வணங்குவர்.⁾ 30⁽வருங்காலத் தலைமுறையினர்␢ அவரைத் தொழுவர்;␢ இனிவரும் தலைமுறையினருக்கு␢ ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.⁾ 31⁽அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;␢ இனி பிறக்கப்போகும் மக்களுக்கு␢ ‛இதை அவரே செய்தார்’ என்பர்.⁾
Alleluia

மத்தேயு 11:28

28மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
Gospel

லூக்கா 14:15-24

15இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார். 16இயேசு அவரிடம் கூறியது: “ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். 17விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ‘வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது’ என்று சொன்னார். 18அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், ‘வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார். 19‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர். 20‘எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது’ என்றார் மற்றொருவர். 21பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ‘நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்’, என்றார். 22பின்பு பணியாளர், ‘தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார். 23தலைவர் தம் பணியாளரை நோக்கி, ‘நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். 24அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்’ என்றார்.”