வாசகங்கள்
2 மார்ச், 2027
Lenten Weekday
அன்றைய திருப்பலி
First Reading
தானியேல் 3: 25, 34-43
25அதற்கு அவன், “கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!” என்றான்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 25: 4-5ab, 6 and 7bc, 8-9
4⁽ஆண்டவரே, உம் பாதைகளை␢ நான் அறியச்செய்தருளும்;␢ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.⁾
5⁽உமது உண்மை நெறியில்␢ என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;␢ உம்மையே நான் நாள் முழுவதும்␢ நம்பியிருக்கின்றேன்;⁾
6⁽ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,␢ உமது பேரன்பையும் நினைந்தருளும்;␢ ஏனெனில், அவை␢ தொடக்கமுதல் உள்ளவையே.⁾
7⁽என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,␢ என் குற்றங்களையும் நினையாதேயும்,␢ உமது பேரன்பிற்கேற்ப␢ என்னை நினைத்தருளும்;␢ ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.⁾
8⁽ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;␢ ஆகையால், அவர் பாவிகளுக்கு␢ நல்வழியைக் கற்பிக்கின்றார்.⁾
9⁽எளியோரை நேரிய வழியில்␢ அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்␢ தமது வழியைக் கற்பிக்கின்றார்.⁾
Verse Before the Gospel
யோவேல் 2: 12-13
12⁽“இப்பொழுதாவது␢ உண்ணா நோன்பிருந்து,␢ அழுது புலம்பிக்கொண்டு,␢ உங்கள் முழு இதயத்தோடு␢ என்னிடம் திரும்பி வாருங்கள்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾
13⁽“நீங்கள் உங்கள் உடைகளைக்␢ கிழித்துக்கொள்ள வேண்டாம்,␢ இதயத்தைக் கிழித்துக்கொண்டு␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்␢ திரும்பி வாருங்கள்.”␢ அவர் அருள் நிறைந்தவர்,␢ இரக்கம் மிக்கவர்;␢ நீடிய பொறுமையுள்ளவர்,␢ பேரன்பு மிக்கவர்;␢ செய்யக் கருதிய தீங்கைக் குறித்து␢ மனம் மாறுகின்றவர்.⁾
Gospel
மத்தேயு 18: 21-35
21பின்பு, பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.
22அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
23விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.
24அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து* கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.
25அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.
26உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான்.
27அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
28ஆனால், அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம்* கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.
29உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.
30ஆனால், அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.
31அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.
32அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.
33நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார்.
34அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
35உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”