வாசகங்கள்
5 மார்ச், 2027
Lenten Weekday. Day of Abstinence from Meat (Age 14 and up).
அன்றைய திருப்பலி
First Reading
ஒசேயா 14: 2-10
2⁽இம்மொழிகளை ஏந்தி␢ ஆண்டவரிடம் திரும்பி வந்து␢ இவ்வாறு சொல்லுங்கள்:␢ “தீவினை அனைத்தையும் § அகற்றியருளும்,␢ நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்;␢ நாங்கள் எங்கள் வாய்மொழியாம்␢ கனிகளை உமக்கு அளிப்போம்;⁾
3⁽அசீரியர் எங்களை␢ விடுவிக்கமாட்டார்கள்;␢ குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்;␢ எங்கள் கைவினைப் § பொருள்களை நோக்கி,␢ ‘எங்கள் கடவுளே!’ என்று␢ இனிச் சொல்லமாட்டோம்;␢ திக்கற்றவன் உம்மிடத்தில்␢ பரிவைப் பெறுகிறான்” § எனச் சொல்லுங்கள்.⁾
4⁽அவர்களுடைய § பற்றுறுதியின்மையை␢ நான் குணமாக்குவேன்;␢ அவர்கள்மேல் உளமார␢ அன்பு கூர்வேன்.␢ அவர்கள் மேலிருந்த என் சினம்␢ தணிந்துவிட்டது.⁾
5⁽நான் இஸ்ரயேலுக்குப்␢ பனி போலிருப்பேன்;␢ அவன் லீலிபோல் மலருவான்;␢ லெபனோனின் மரம்போல் § வேரூன்றி நிற்பான்.⁾
6⁽அவனுடைய கிளைகள்␢ விரிந்து பரவும்;␢ அவன் பொலிவு␢ ஒலிவ மரம் போல் இருக்கும்;␢ லெபனோனைப்போல்␢ அவன் நறுமணம் பரப்புவான்.⁾
7⁽அவர்கள் திரும்பிவந்து என்*␢ நிழலில் குடியிருப்பார்கள்;␢ கோதுமைபோல்␢ தழைத்தோங்குவார்கள்.␢ திராட்சைக் கொடிபோல்␢ செழிப்படைவார்கள்.␢ லெபனோனின்␢ திராட்சை இரசம்போல் § அவர்களது புகழ் விளங்கும்.⁾
8⁽இனிமேல் எப்ராயிமுக்குச்␢ சிலைகள் எதற்கு?␢ நானே அவனுக்குச்␢ செவி சாய்த்து,␢ அவன்மேல்␢ அக்கறை கொண்டுள்ளேன்;␢ நான் பசுமையான␢ தேவதாரு மரம் போன்றவன்.␢ உன் கனி எல்லாம்␢ என்னிடமிருந்தே வரும்.⁾
9⁽ஞானம் நிறைந்தவன் எவனோ,␢ அவன் இவற்றை § உணர்ந்து கொள்ளட்டும்;␢ பகுத்தறிவு உள்ளவன் எவனோ,␢ அவன் இவற்றை␢ அறிந்து கொள்ளட்டும்;␢ ஆண்டவரின் நெறிகள்␢ நேர்மையானவை;␢ நேர்மையானவர்கள்␢ அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்;␢ மீறுகிறவர்கள்␢ அவற்றில் இடறி விழுகின்றார்கள்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 81: 6c-8a, 8bc-9, 10-11ab, 14 and 17
6⁽தோளினின்று உன் சுமையை␢ அகற்றினேன்;␢ உன் கைகள் கூடையினின்று␢ விடுதலை பெற்றன.⁾
7⁽துன்ப வேளையில்␢ என்னை நோக்கி மன்றாடினீர்கள்;␢ நான் உங்களை விடுவித்தேன்;␢ இடிமுழங்கும் மறைவிடத்தினின்று␢ நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்;␢ மெரிபாவின் நீருற்று அருகில்␢ உங்களைச் சோதித்தேன். (சேலா)⁾
8⁽என் மக்களே,␢ எனக்குச் செவிகொடுங்கள்;␢ நான் உங்களுக்கு␢ எச்சரிக்கை விடுக்கின்றேன்;␢ இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச்␢ செவிசாய்த்தால்,␢ எவ்வளவு நலமாயிருக்கும்!⁾
9⁽உங்களிடையே வேற்றுத் தெய்வம்␢ இருத்தலாகாது;␢ நீங்கள் அன்னிய தெய்வத்தைத்␢ தொழலாகாது.⁾
10⁽உங்களை எகிப்து நாட்டினின்று␢ அழைத்துவந்த␢ கடவுளாகிய ஆண்டவர் நானே;␢ உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்;␢ நான் அதை நிரப்புவேன்.⁾
11⁽ஆனால் என் மக்கள்␢ என் குரலுக்குச்␢ செவிசாய்க்கவில்லை;␢ இஸ்ரயேலர் எனக்குப்␢ பணியவில்லை.⁾
14⁽நான் விரைவில்␢ அவர்கள் எதிரிகளை அடக்குவேன்,␢ என் கை அவர்களின்␢ பகைவருக்கு எதிராகத் திரும்பும்.⁾
Verse Before the Gospel
மத்தேயு 4: 17
17அதுமுதல் இயேசு, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
Gospel
மாற்கு 12: 28-34
28அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார்.
29❮29-30❯அதற்கு இயேசு, ⁽“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’⁾ என்பது முதன்மையான கட்டளை.
30Same as above
31⁽‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’⁾ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.
32அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ⁽‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’⁾ என்று நீர் கூறியது உண்மையே.
33⁽அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்தவதும்⁾ எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது” என்று கூறினார்.
34அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.