மார்ச் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
28293031
இன்றுக்கு

வாசகங்கள்

8 மார்ச், 2027

Lenten Weekday/ John of God, Religious Founder

John of God, Religious Founder
First Reading

எசாயா 65: 17-21

17⁽இதோ! புதிய விண்ணுலகையும்␢ புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்;␢ முந்தியவை␢ நினைத்துப் பார்க்கப்படுவதில்லை;␢ மனத்தில் எழுதுவதுமில்லை.⁾ 18⁽நான் படைப்பனவற்றில் நீங்கள்␢ என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள்.␢ இதோ நான் எருசலேமை␢ மகிழ்ச்சிக்குரியதாகவும்␢ அதன் மக்களைப்␢ பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.⁾ 19⁽நானும் எருசலேமை முன்னிட்டு␢ மகிழ்ச்சியடைவேன்;␢ என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்;␢ இனி அங்கே அழுகையும் கூக்குரலும்␢ ஒருபோதும் கேட்கப்படா.⁾ 20⁽இனி அங்கே␢ சில நாள்களுக்குள் இறக்கும்␢ பச்சிளங்குழந்தையே இராது;␢ தம் வாழ்நாளை நிறைவு செய்யாத␢ முதியவர் இரார்;␢ ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும்␢ இளைஞனாகக் கருதப்படுவான்.␢ பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும்␢ சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.⁾ 21⁽அவர்கள் வீடு கட்டி␢ அங்குக் குடியிருப்பார்கள்;␢ திராட்சை நட்டு␢ அதன் கனிகளை உண்பார்கள்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 30: 2 and 4, 5-6, 11-12a and 13b

2⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உம்மிடம் உதவி வேண்டினேன்;␢ என்னை நீர் குணப்படுத்துவீர்.⁾ 4⁽இறையன்பரே, ஆண்டவரைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ தூயவராம் அவரை நினைந்து␢ நன்றி கூறுங்கள்.⁾ 5⁽அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான்␢ இருக்கும்; அவரது கருணையோ␢ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;␢ மாலையில் அழுகை;␢ காலையிலோ ஆர்ப்பரிப்பு.⁾ 6⁽நான் வளமுடன் வாழ்ந்தபோது,␢ ‛என்னை ஒருபோதும்␢ அசைக்க முடியாது’ என்றேன்.⁾ 11⁽நீர் என் புலம்பலைக்␢ களிநடனமாக மாற்றிவிட்டீர்;␢ என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு␢ எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.⁾ 12⁽ஆகவே என் உள்ளம்*␢ உம்மைப் புகழ்ந்து பாடும்;␢ மௌனமாய் இராது;␢ என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.⁾
Verse Before the Gospel

ஆமோஸ் 5: 14

14⁽நன்மையை நாடுங்கள்,␢ தீமையைத் தேடாதீர்கள்;␢ அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல␢ படைகளின் கடவுளாகிய ஆண்டவர்␢ உங்களோடு இருப்பார்.⁾
Gospel

யோவான் 4: 43-54

43அந்த இரண்டு நாட்க‌ளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். 44தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். 45அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில், அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.⒫ 46கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். 47இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். 48இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.” என்றார். 49அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். 50இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். 51அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். 52“எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். 53‘உம் மகன் பிழைத்துக் கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். 54இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.